CPS திட்டத்தில் 31.12.2025க்கு முன்னர் ஓய்வுபெற்று CPS திட்டத்தில் பணியாளர் பங்களிப்பு 10% அதற்கான வட்டி மேலும் இதற்கு இணையான அரசு பங்களிப்பு 10% அதற்கான வட்டி ஆகியவற்றுடன் முழுத்தொகை பெற்று *தற்போது உயிருடன் உள்ள ஓய வு பெற்ற CPS அரசு ஊழியர்களுக்கு எதிர்வரும் பிப்ரவரி 2026 மாதம் முதல் சிறப்பு கருணை ஓய்வூதியம் அனுமதித்து தொகை வழங்கப்பட உள்ளதால்*....
கீழ்கண்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும்.
1. ஆதார் அட்டை
2. பான்கார்டு
3.வங்கி பாஸ் புத்தக நகல் A/C நம்பருக்காக.
4. ஊழியர் மற்றும் அவரது மனைவி / கணவர் உடன் இணைந்த போட்டோ - மூன்று.
5. இன்றைய தேதியில் உயிருடன் இருப்பதர்கான Life Certificate.
6. கடைசியாக CPS தொகை வழங்க உத்திரவிட்ட கொடு ஆணை நகல்.
7. CPS முழுதொகை பெற்ற நாள் விபரம் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்கவும்.
*இவை அனைத்தும் நீங்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தில் மேற்படி விபரத்தை கணினியில் உள்ளீடு செய்து சம்மந்தபட்ட கருவூலத்திற்கு அனுப்பவேண்டும்*.
மேலும் சிறப்பு கருணை ஓய வூதியம் பெறுவதற்கான படிவம் பூர்த்தி செய்து (3 நகல்) சம்மந்தபட்ட துறை அலுவலர் மூலம் TAPS க்கு அனுப்பி கொடு ஆணை பெற வேண்டிவரும் என்பதால் அதற்கு தயாராக இருக்கவும்.



No comments:
Post a Comment