சொர்க்கம் இருக்கும் சரியான இடம் கண்டுபிடிப்பு - ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

பூமியிலிருந்து 273,000,000,000,000,000,000,000,000,000,000 மைல்களுக்கு அப்பால் உள்ளதாக விஞ்ஞானி தகவல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயற்பியல் விரிவுரையாளரான டாக்டர் மைக்கேல் கில்லன் (Dr. Michael Guillen), சொர்க்கம் என்பது பிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரிந்த எல்லையில் (Cosmic Horizon) அமைந்திருக்கலாம் என்ற ஒரு சுவாரஸ்யமான கோட்பாட்டைப் பகிர்ந்துள்ளார்.

விண்மீன் மண்டலங்கள் ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 186,000 மைல்கள்) நம்மை விட்டு விலகிச் செல்லும் புள்ளியே இந்த அண்ட எல்லை எனப்படுகிறது. நவீன அண்டவியலின் படி, இதுவே நம்மால் அவதானிக்கக்கூடிய பிரபஞ்சத்தின் இறுதி எல்லை ஆகும்.

தற்போதைய அறிவியல் கோட்பாடுகளின்படி, இந்த எல்லையில் 'காலம்' (Time) என்பது செயலிழந்து விடுகிறது. அங்கு கடந்த காலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என்ற பாகுபாடு இல்லை. இந்த 'காலமற்ற நிலையை' சொர்க்கம் குறித்த மத ரீதியான விளக்கங்களுடன் கில்லன் ஒப்பிடுகிறார்.

பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப் பழமையான பொருட்கள் இந்த எல்லையிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்த எல்லைக்கு அப்பால் உள்ள எவையும் 'பெருவெடிப்பு' (Big Bang) நிகழ்வுக்கு முந்தையதாக இருக்க வேண்டும். இது விண்வெளி மற்றும் காலத்திற்கு (Space-time) அப்பாற்பட்ட ஒரு இடமாக இது கருதப்படுகிறது.

இந்தக் கருத்தானது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை விட, தத்துவ மற்றும் ஆன்மீக ரீதியிலான ஒரு விளக்கமாகவே விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஆழமான மர்மங்களை ஆராயும் போது அறிவியலும் நம்பிக்கையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel