Thursday, February 12, 2026

12.02.2026(வியாழக்கிழமை) - இன்றைய செய்திகள்

🌹அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்.!

🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.!!

🌹🌹🌹வாய் தவறி விழும் பேச்சுக்கள்...

கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது...

யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📘📕100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings வெளியீடு .

📘📕3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு FLS - மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் - DEE Proceedings வெளியீடு.

📘📕TET தேர்ச்சி பெற்ற (23.08.2010க்கு பிந்தைய) அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பலன்கள் வழங்க அரசாணை கோரி பள்ளிக்கல்வி இயக்குநரை தேசிய ஆசிரியர் சங்கம் நேரில் சந்தித்து மனு

📘📕மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.

📘📕தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

📘📕"மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லக்கூடிய மாணவர்கள் தனியாக இருக்கிறார்களே என்று பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். நான்கு நாளைக்கு அவர்களுக்கு நான் தான் அப்பா. நான் தான் அம்மா”

என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

📘📕அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நியமனம் தொடர்பாக எழுந்த புகார் குறித்து நடக்கும் விசாரணைக்கு தேனி மாவட்ட டி.இ.ஓ., நாகலட்சுமி ஆஜராக தொடக்கக் கல்வி துணை இயக்குநர் சுப்பாராவ் உத்தரவிட்டுள்ளார்.

📘📕மேல்நிலை இரண்டாமாண்டு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

📘📕பள்ளி ஆசிரியை ஒருவரிடம் முறையான விசாரணையின்றி ₹74 லட்சம் ஊதியத்தை திரும்பப் பிடிக்க (Recovery) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

📘📕தற்போது அமலில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961க்கு பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இதற்கான வருமான வரி வரைவு விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

📘📕பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க சிறப்பு ஆணை வழங்கி அனுமதியளித்து தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை உத்தரவு

📘📕PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 📘📕தமிழக அரசு எச்சரிக்கை

"அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம்"

மத்திய அரசை கண்டித்து இன்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை 📘📕12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு சென்னை அண்ணா நகரில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்ததாக போலி மருத்துவர்கள் 3 பேர் கைது

கைதானவர்களில் இருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் வேலூரைச் சேர்ந்தவர் எனவும் தகவல்

📘📕SIR - விண்ணப்பங்களின் பரிசீலனை நிறைவு

"தமிழகத்தில் SIRக்கு பின் வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரி 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பரிசீலிக்கும் பணி நிறைவு

சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது"

-தேர்தல் ஆணையம்

📘📕ராகுல்காந்தியை சந்தித்து மகனின் திருமணத்திற்கு அழைத்த சச்சின்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மகன் அர்ஜுனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

📘📕வரும் 22ம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடுக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமைப்பார் என திமுக தலைமை அறிவிப்பு

📘📕கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்

📘📕CM ரங்கசாமியை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்கள் போராட்டம்

முதல்வர் ரங்கசாமியை முற்றுகையிட முயன்ற ஊழியர்களால் பரபரப்பு - தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் - ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு

📘📕"தேமுதிகவிடம் பேசவில்லை"

"சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவிடம் பேசவில்லை.

கூட்டணி ஆட்சி போன்ற எந்த டிமாண்டும் பாஜகவிடம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்"

-தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

📘📕குடியரசு தலைவர், ஆளுநர் நிகழ்வுகளில் இனி 3.10 நிமிடங்களை கொண்ட வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும். ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் வந்தே மாதரம் கட்டாயம்"

-மத்திய அரசு

📘📕ஆட்சியில் பங்கு - ஒத்துவராது"

"ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது, திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும், ராகுல் காந்தி அரசியலைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார்"

-முதல்வர் ஸ்டாலின்

விஜய் அறிவிப்பு

தவெகவில் கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமனம். தவெகவில் நிர்வாக ரீதியாக ஏற்கனவே 128 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 4 மாவட்டங்கள் உருவாக்கம்

புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

📘📕மகாராஷ்டிராவில் பள்ளி மைதானத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தகவல்

📘📕இந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நிறைவேற்றிய திட்டங்கள்தான் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு தமிழ்நாட்டை வழிநடத்தப்போகும் ப்ளூபிரிண்ட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

📘📕தெளிவுபடுத்திவிட்டோம்..''

“அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை, வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி அமைக்கின்றோம், ஓபிஎஸ், சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்''- ஈபிஎஸ்

📘📕சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் இராஜேந்திரன்

📘📕கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் காவல் துணைஆணையர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News