Breaking

Monday, February 16, 2026

16.02.2026 (திங்கட்கிழமை) - இன்றைய செய்திகள்




🌹பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்களையும்.

கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும்..

துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தினவர்களையும்...

நமக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மை விசாரித்தவர்களையும்..

ஒருநாளும் மறவாதிருங்கள்...

அவர்கள் தான் நம் உண்மையான சொந்தங்கள்,நண்பர்கள்.!

🌹🌹எல்லோருடைய வலியையும் புரிந்து கொள்ள தேவையில்லை...

எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்தாலே போதும்...

யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் தோன்றாது.!!

🌹🌹🌹ஊசி தங்கத்தில் செய்தது என்று எடுத்து கண்ணில் குத்துவீர்களா

அதுபோலத்தான் எவ்வளவு நெருக்கமான உறவானாலும் நம் உணர்வுகளை மதிக்க தெரியாதவராயின்

அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புலம்பல் - அடுத்தடுத்த திருப்புதல் தேர்வுகளால் திணறல்'

(நாளிதழ் செய்தி)

📕📘நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல்

📕📘CBSE 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் புதிய முறை அமல்

📕📘10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

📕📘G.O -128 - TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை வெளியீடு.

📕📘இன்று 16/02/2026 முதுகலை ஆசிரியர்கள் பணி ஏற்பு செய்ய உள்ளார்...

வாழ்த்துகள்:-

👉1) ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் அதே CPS number இல் தொடரலாம்

👉2) பழைய ifhrms kalanjium id தான்... பழைய பள்ளி/அலுவலகத்தில் transfer போட்டு விட்டார்கள் எனில்

புதிய பணியிடத்தில் பிப்ரவரி மாதம் முழு சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்...

👉3) 15/2 வரை பழைய பள்ளி/ அலுவலகத்தில் partial pay போட ifhrms இல் வழிவகை இல்லை

( பழைய பள்ளி/அலுவலகத்தில் எந்த கணக்கு தலைப்பாக இருந்தாலும்)

1-15

16-28 என சரியாக பிரிந்து வரும்

எனவே புதிய பணியிடத்தில் தான் பிப்ரவரி மாதம் ஊதியம் பெற வேண்டும்...

👉4) 1/1/26 பிறகு புதிய நியமனம் எனில் TAPS திட்டம் தான் என்பது நீங்கள் அறிந்ததே

( PG appointment order இல் தெளிவாக உள்ளது)

👉5) இதுவரை ifhrms kalanjium id create செய்யும் போது automatically CPS number create ஆகி விட்டது ...

👉அதே போல TAPS number create ஆகும் என நினைக்கிறேன்...

👉6) ifhrms kalanjium id creation necessary details pdf ஆக இணைத்துள்ளேன்..

மார்க் mandatory...

👉7) I'd creation நாமே நமது login மூலம் செய்து விடலாம் treasury/CEO office contact செய்ய தேவையில்லை

👉8) ifhrms kalanjium இல் PG Post vacant ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

👉9) நமது பள்ளியில் உள்ள அனைத்து பணியிடங்கள் விவரங்கள் பார்க்க

👉Initiator login

e services

HR

Reports

Post occupancy details report.....

Action Click ok

Check in download...

👉இதில் அனைத்து பணியிடங்கள் விவரங்கள் இருக்கும்

👉பணியில் உள்ள பணியிடத்தின் கீழ் பணியாளர் பெயர் இருக்கும்...

👉பணியிடத்தின் கீழ் பணியாளர் பெயர் எதுவும் இல்லாமல் இருப்பின் அவை காலிப்பணியிடங்கள்

📕📘ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் (Annexure-I) நிரப்புவது எப்படி?

👉படிவத்தை நிரப்பும் முறை (How to Fill):

👉Name of the Teacher: உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.

👉Date of Birth and Age: உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.

👉Name of the Post held now: தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).

👉Date of Joining in the present post: தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.

👉Date of Initial Appointment: முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.

👉Name of the Post during Initial Appointment: முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.

👉Date of Regularization: பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.

👉Working Department: நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).

Working in Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.

👉Full Time / Consolidated / Part Time: காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.

👉Name of the School with Address: பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.

👉Working District: பணிபுரியும் மாவட்டம்.

School UDISE CODE: பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.

👉Qualification: உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).

👉Teacher EMIS ID NO: உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.

👉IFHRMS Employee ID: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).

👉கையொப்பம்: இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.

வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும். இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்.

📕📘ஆசிரியர் தகுதித் தேர்வு

சிறுபான்மை நிறுவன பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா ? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள் TNTET 2026 சிறுபான்மை நிறுவன ஆசிரியர்கள் எழுதலாம். தற்போதய கட்டாய சூழலை கருத்தில் கொண்டு ,வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நலம் .அவசியம் விண்ணப்பம் செய்யவும்

📕📘புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - Dir Proceedings வெளியீடு.

📕📘ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்= குறைத்திட வழக்கு

WP(MD) No : 4173/2026

அரசாணை எண் : 23 பள்ளிக்கல்வித் துறை நாள் : 28.01.2026 , ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் : 03 A/2025 நாள் .29.01.2026 சேலன்ஞ் செய்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது .

all other reserved category (BC , BC (M) , MBC , DNC , PWD) 50% மதிப்பெண் 40% (60) குறைத்திட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று திங்கள் கிழமை விசாரணைக்கு வருகின்றது.

📕📘அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட ஈபிஎஸ்

ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்

மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

சிறுபான்மை வகுப்பு மகளிருக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன்

முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்''

சத்தியமங்கலத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

📕📘திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் 📕📘“நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது" -வானதி சீனிவாசன் 📕📘இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழகத்தின் நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்புதான் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

📕📘"2021ஆம் ஆண்டை விட தற்போது தமிழ்நாட்டில் நமக்கு வரவேற்பும் ஆதரவும் கூடி உள்ளது"

ஜோலார்பேட்டை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

📕📘2.50 கோடி வாக்குகள் உறுதி

2.50 கோடி வாக்குகளா? என மலைக்க வேண்டாம், ஒவ்வொருவரும் 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்

ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகளை இலக்காகக் கொண்டால் 2.50 கோடி வாக்குகள் உறுதி

தேர்தலுக்குள் ஒவ்வொரு வாக்காளரையும் தலா 5 முறையாவது சந்திக்க வேண்டும்

-முதல்வர் மு.க.ஸ்டாலின்

📕📘மத்திய கைலாஷில் புதிய மேம்பாலம் திறப்பு

அடையாறு - மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

📕📘உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

-தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

📕📘தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலடிக்குமுளை பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா மற்றும் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

📕📘10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரினின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, 2 கண்கள் ஆகியவை தானமாக ஒப்படைப்பு

குழந்தை அலின் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், குழந்தையின் உடல் உறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம்

கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது

📕📘நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி

📕📘நாளை பிப்.17ம் தேதி வங்கதேச பிரதமராக தாரிக் ரகுமான் பதவியேற்கிறார்

இந்தியாவின் பிரதிநிதியாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள் 📕📘தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment