Thursday, February 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2026

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


திருக்குறள்: 

குறள் 519: 

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்குந் திரு 

விளக்க உரை: 

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

பழமொழி :

An empty sack cannot stand upright 

வெறும் கையால் முழம் போட முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும்பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது- கார்லஸ் டிக்கின்ஸ்

பொது அறிவு : 

01.2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில்  இடம்பெற்றுள்ள சின்னம் எது?

    மங்கள்யான்- Mangalyaan

02.உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம்  எங்குள்ளது?

      மெக்கா-சவூதி அரேபியா

 Mecca-Saudi Arabia.

English words :

regret –to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

remorse –a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.

தமிழ் இலக்கணம்: 

 தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்
ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.
1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்
2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர் 
ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்*  என்று தான் குறிக்க வேண்டும் 
சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்

தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.

அறிவியல் களஞ்சியம் :

நமது  பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி.  பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக்  கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.

பிப்ரவரி 19


நீதிக்கதை

 அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

19.02.2026

⭐ தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

⭐உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

⭐’ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:
நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

Today's Headlines

⭐ Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

⭐ In Cuba, which is known as the “Sugar Bowl of the World,” the fuel shortage is worsening day by day. As a result, the country’s economy and the normal life of the people have been severely affected.

⭐ ‘2,000 children rescued from Russia’ – Ukrainian President Zelenskyy

🏀 Sports News

🏀 T20 World Cup:
Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application