Breaking

Wednesday, February 4, 2026

4.02.2026(புதன்கிழமை) - இன்றைய செய்திகள்


🌹உங்களுடைய தவறுகளை உங்களிடமே சொல்பவர்களை இழந்து விடாதீர்கள்...

ஏனெனில் அவர்கள் நீங்கள் மற்றவர்களிடம் தலை குனியக் கூடாது என்று எண்ணுபவர்கள்.!

🌹🌹தேவைகள் முடிந்தபின்பு தேரே என்றாலும் தெருவில் தான் நிக்கனும்...

👉தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல சுயநலம்.!!

🌹🌹🌹படிப்பு,பணம்,பதவி, புகழ்,அந்தஸ்து, அதிகாரம் என்று எத்தனையோ இருந்தாலும்...

சக மனிதரை மதிக்கத் தெரியாதவர் மனிதரே அல்ல...

மிருகத்துக்கும் கீழானவர்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈8.02.2026(ஞாயிறு) அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு - ஜாக்டோ ஜியோ

🌈🌈ஜாக்டோ - ஜியோ : ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அழைப்பிதழ் வெளியீடு.

🌈🌈முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு ஆசிரியர்கள் புறக்கணிப்பு என வரும் செய்தி தவறான செய்தியாகும். நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல்வர் நல்ல செய்தி அறிவிக்க வாய்ப்பு என கருதி மிகுந்த எழுச்சியோடு ஆசிரியர்கள் புறப்பட தயாராகிக் கொண்டுள்ளனர்.

🌈🌈கேரளாவில் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைக்க அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு

அதிகப்படியான கல்விச்சுமையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர தேர்ச்சி விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் நடவடிக்கை என தகவல்

🌈🌈86 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பட்டியல் வெளியீடு.

🌈🌈G.O 3 - தலைமைச்செயலகப் பணி - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பதவி உயர்வுக்கு ஏற்ற 13 பணியிடங்கள் - அரசாணை வெளியீடு.

🌈🌈முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தர ஊதியம் 5400

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர் , வட்டாரக் கல்வி அலுவலர் தர ஊதியம் 5400 வழக்குகள் தொகுப்பு வழக்குகளாக விசாரிக்கப்பட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என தகவல்.

🌈🌈ஹால் டிக்கெட் வெளியீடு.

👉 சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

🌈🌈முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் - அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கும், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

🌈🌈மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈சம்பளத்தை பார்க்காமல் ; நாட்டிற்கு என்ன செய்யமுடியும் என நோக்குங்கள்' - பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஐஐடி இயக்குனர் காமகோடி

🌈🌈பள்​ளி​களில் ஆய்​வுப் பணி​களை மேம்​படுத்​தும் நோக்​கில் 'பள்ளிப் பார்​வை-2.0' எனும் புதிய செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

🌈🌈வீடில்லாமல், தெருத் தெருவாக சுற்றித் திரியும் தெரு நாய்களை கணக்கெடுக்க பள்ளிக்கு ஓர் ஒருங்கிணைப்பு அலுவலர் (ஆசிரியர்) நியமிக்கப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சியின் மாநகராட்சி கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🌈🌈தமிழ் கலாச்சாரமே அறிவியலின் ஊற்றுக்கண்: பூம்புகார் கல்லூரியில் ஜப்பான் அறிஞர் வியப்பு

🌈🌈+2 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் - DGE செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தலைமை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.வழக்கு முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள்-அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

🌈🌈சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

🌈🌈2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

🌈🌈இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட

25% வரி 18%ஆக குறைப்பு"

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

🌈🌈Yamaha EC-06 அறிமுகம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Yamaha EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

அதிகபட்சமாக 169 கி.மீ. வேகம் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய சந்தை மதிப்பு ரூ.1,67,600 என நிர்ணயம்

🌈🌈கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடித்துள்ள மின்னலே திரைப்படம் பிப்.13ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது

🌈🌈Sim-ல் கொட்டிய தங்க மழை

சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ள சம்பவம் உலகையே மிரள செய்திருக்கிறது

🌈🌈சாலையில் கிடந்த 45 சவரன் நகையை மீட்டு

உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்க சங்கிலியை

பரிசளித்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்

🌈🌈சென்செக்ஸ் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்வு, தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 750 புள்ளிகள் உயர்வு

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் எழுச்சி

🌈🌈பட்ஜெட் வெறும் ஏமாற்றம் தான்"

"மத்திய பட்ஜெட் வெறும் ஏமாற்றம் தான், வரும் தேர்தலில் மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்"

-முதல்வர் ஸ்டாலின்

🌈🌈விஜய்யிடம் என்ஜின் உள்ளதா?"

"விஜய்யிடம் என்ஜின் உள்ளதா? என்ற கேள்வி என்னிடம் உள்ளது. விஜய் பேசும் போது மக்கள் கைத்தட்ட வேண்டும். அப்படி தான் அவர் பேச்சு உள்ளது. அவரது பேச்சில் ஆழமான கருத்து இல்லை"

அண்ணாமலை

🌈🌈தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரிக்கு வருகை தர உள்ளார்

குமரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார் இதற்காக வரும் 19 ஆம் தேதி இரவு நாகர்கோவில் வருகிறார், மறுநாள் 20 ஆம் தேதி அரசு விழாவில் பங்கேற்க உள்ளார்.

🌈🌈துரோகிகளை துணைக்கு அழைத்து வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான் - ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🌈🌈சித்தராமையாவுடன் நிற்பேன்''

முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுப்பு

அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன்; எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும் எனவும் அவர் விளக்கம்

🌈🌈"NDA கூட்டணி பலமாக உள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈபிஎஸ் முடிவு செய்வார். ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைப்பது, அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. அவரை என்டிஏ கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

🌈🌈சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்து, சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

🌈🌈'இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' - WHATSAPP நிறுவனத்திடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

🌈🌈5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 16ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் வருகையையொட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை திறந்த வைக்க உள்ளார்.

🌈🌈நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என மொத்தம் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

🌈🌈இரண்டாவது சிம்பொனியின்

எழுத்துப்பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது...

புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு

இளையராஜா சமூக வலைதளத்தில் பதிவு

🌈🌈செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

🌈🌈100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 5ம் தேதி சென்னையில் பிரமாண்ட நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

🌈🌈இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் : சபாநாயகர் அப்பாவு பேட்டி

🌈🌈கரூர் சம்பவத்திற்கு எட்டிப் பார்க்காத விஜய் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்: அமைச்சர் ஐ.பெரியசாமி காட்டம்

🌈🌈தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஏதாவது ஒரு நன்மை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

🌈🌈மியான்மரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment