Breaking

Saturday, February 7, 2026

இன்றைய செய்திகள் 7.02.2026(சனிக்கிழமை)


🌹இதுவரை நடந்ததை யோசிப்பதை விட,இனி எப்படி நடக்கவேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்.!

🌹🌹வார்த்தைகளால் கொன்று விட்டு பிறகு மன்னிப்பு கேட்டு என்ன பயன்...

வலிகள் குறையப் போவதும் இல்லை... பேசிய வார்த்தைகள் மனதை விட்டு அழியப் போவதும் இல்லை.!!

🌹🌹🌹உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான்...

உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும்...

பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் பெற முடியாது: ஐகோர்ட் (பத்திரிகைச் செய்தி)

⛑️⛑️உலகின் சிறந்த ஆசிரியர் - இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வு - 1 மில்லியன் டாலர் பரிசு.

⛑️⛑️JEE முதன்மைத் தேர்வு - தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

⛑️⛑️கல்வித்தகுதியை வரிசையாகப் பெறாத ஆசிரியரின் பணி நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️தேர்வுத்துறை இயக்குநரின் ‘ஸ்கிரைப்’ நியமன சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️CTET பிப்ரவரி 2026: அனுமதி அட்டை வெளியீடு - தேர்வு வழிமுறைகள் – CBSE

⛑️⛑️சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.

⛑️⛑️2026ஆம் ஆண்டுக்கான UPSC அறிவிக்கை வெளியீடு ⛑️⛑️பிப்.8-ல் நடைபெற உள்ள NIFT நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

⛑️⛑️7.36 லட்சம் பேர் எழுதிய NET தேர்வு முடிவுகள் வெளியீடு.

⛑️⛑️State Government Salary Package (SGSP) - அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் 3 வங்கிகள் இணைப்பு - அரசாணை வெளியீடு.

⛑️⛑️பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

⛑️⛑️TET தேர்வு 2025 - தேர்ச்சி சான்றிதழில் பிழைகள் இருப்பின் சரிசெய்வது தொடர்பாக :-

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு

TET தேர்வு 2025 - பின்வருவனவற்றில் மாற்றத்திற்கான கோரிக்கை:- 👉1. ஆரம்ப மாற்றம் 👉2. பிறந்த தேதி மாற்றம்

👉3. எழுத்து மாற்றம்

👉4. பாலின மாற்றம்

விண்ணப்ப நகல், சான்றுகள் மற்றும் சலான் ரூ.200/-க்கு பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய நகலுடன் உங்களது சான்றிதழில் உள்ள பிழையினை குறிப்பிட்டு, சான்றிதழ் நகல் ஒன்றும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.

⛑️⛑️வெள்ளக்கோவில் ஒன்றியம் செம்மாண்டாம்பாளையம் இடைநிலை ஆசிரியர் திருமதி தேன்மொழி அவர்கள் Mcom.BED க்கு பெற்ற ஊக்க ஊதியத்தை வெள்ளகோவில் வட்டாரக் கல்வி அலுவலர் ந.க.எண் 6475/அ1/2023.தேதி 5.9.23 உத்தரவு மூலம் பிடித்தம் செய்ததை, சென்னை மாண்பமை நீதியரசர் தடை செய்ததோடு, ஏற்கனவே Mcom,Bed க்கு கொடுத்த ஊக்க ஊதியம் செல்லும்.அதை உடனடியாக வழங்க வேண்டும் W.P.NO 6941 / 2024 & W.MP NO 7739/2024 உத்தரவு மூலம் பிறப்பித்து உள்ளார்.

⛑️⛑️10, +1(Arrears) & +2 பொது தேர்வுகள் :தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்ற சிறப்பு வாய்ப்பளித்தல் குறித்து அரசு தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு வெளியீடு.

👉10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய, தனித்தேர்வர்களுக்கு தட்கல் முறையில் மீண்டும் ஒரு வாய்ப்பு.

⛑️⛑️TNPSC Group 4: 2-ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு – பிப்.24, 25 சென்னையில் நடைபெறவுள்ளது.

⛑️⛑️SI தேர்வு முடிவுகள் நீக்கம் சர்ச்சை – தொழில்நுட்ப கோளாறு காரணம் என நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

⛑️⛑️நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியீடு

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் இருந்த நிலையில், 12 ஊராட்சிகளைப் பிரிந்து குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்

அதேபோல, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 22 ஊராட்சிகளில், 13 ஊராட்சிகளைப் பிரித்து பந்தலூர் ஒன்றியம் உருவாக்கம் ⛑️⛑️சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது - சென்சார் போர்டு

⛑️⛑️புதுச்சேரியில் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000 இருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

இத்திட்டத்தால் அரசுக்கு ரூ.17.50 கோடி கூடுதல் செலவாகும் என கணிப்பு

⛑️⛑️சிக்கிம் நம்சி பகுதியில் நேற்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

⛑️⛑️குப்பையை கொட்ட ஆன்லைனில் புக் செய்த பெண்

குப்பை கொட்டுவதற்கு ரேபிடோ பயன்படுத்திய பெண்

பெண்ணின் வீட்டிற்கு சென்ற ரேபிடோ ஓட்டுநர் அவர் கொடுத்த பொருளை வாங்கிவிட்டு டெலிவரி லொகேஷனுக்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாததால் அப்பெண்ணுக்கு அவர் போன் செய்துள்ளார்.

அதற்கு அப்பெண் குப்பை கொட்டுவதற்கு தான் அழைத்தேன், கிடங்கில் வீசி விடுங்கள் எனக் கூறியதால் அவர் மனவேதனை அடைந்துள்ளார்.

⛑️⛑️வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

⛑️⛑️விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️அனைவரும் கொண்டாடும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்" - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

⛑️⛑️பிரதமர் மோடி வருகை தேதி மாற்றம்

மதுரை மண்டேலா நகர் பகுதியில் வரும் 28ம் தேதி நடக்க இருந்த பிரதமர் மோடியின் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1ம் தேதிக்கு மாற்றம்

⛑️⛑️6 புதிய சமத்துவபுரங்கள் திறப்பு

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்கள், ரூ.212 கோடியில் அங்கன்வாடி, பள்ளி கட்ட‌டங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

⛑️⛑️எங்களுடைய திட்டங்களை காப்பி அடித்துதான் அதிமுக தேர்தல் அறிக்கையாக சொல்கிறது. தேர்தல் அறிக்கை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய வகையில் இருக்கும்

அதிமுகவால் சொல்லத்தான் முடியும்; ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தால் தான் செய்ய

முடியும்

-அமைச்சர் தங்கம் தென்னரசு

⛑️⛑️மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை!

வருமான வரித்தறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (appellate authority) விஜய் அணுகலாம் என நீதிபதி தெரிவிப்பு!

⛑️⛑️களத்தில் இறங்குங்கள் தாய்மார்களே!”

பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு வழங்கியிருக்கிறது

அடுத்த இரண்டு மாதத்திற்கு தாய்மார்கள் களப்பணியில் இறங்கி அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்

-துணை முதலமைச்சர் உதயநிதி

⛑️⛑️இனி பாரத் டாக்ஸி

ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட டாக்ஸி நிறுவனங்களைப் போல பாரத் டாக்ஸி என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது மத்திய அரசு

⛑️⛑️ஊழல் செய்ய மாட்டேன் என விஜய் சொல்லி வருகிறார், இப்போதுதான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து விஜயை எதிர்த்து ட்ரம் அடிப்போம்"

-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

⛑️⛑️மாம்பழம் சின்னம்

எங்களுக்கு தான்"

"மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம், நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும்

கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, விரைவில் நல்ல செய்தி வரும்"

-பாமக நிறுவனர் ராமதாஸ்

⛑️⛑️அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

⛑️⛑️சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப்.17-க்கு முன் அறிவிக்கிறது தேமுதிக

இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பு கூட்டணியை அறிவிப்போம்

⛑️⛑️விருதுநகரில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

⛑️⛑️குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் - எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

⛑️⛑️இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிர்ணயம்

⛑️⛑️மனித வெடிகுண்டு தாக்குதல் - 31 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு

மசூதியில் தொழுகையின்போது நடந்த தாக்குதலில் 169 பேர் படுகாயம்

⛑️⛑️பாஜக மாநில குழு அமைப்பு

சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணிக்கு வலுசேர்த்திட பாஜக சார்பில் மாநில குழு அமைப்பு

தலைவராக துரைசாமியையும் துணை தலைவராக பாலச்சந்திரனையும் நியமித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment