ஆசிரியை சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

மாணவர்களை பிரம்பால் அடித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 380க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்ற னர். தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட 29 ஆசிரியர்கள் பணியாற்றி வரு கின்றனர்.இந்த பள்ளியில் 10ம் வகுப்பில் 80 மாணவர் கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் சில ரின் மதிப்பெண் குறைந்த தால், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மாணவர்களை முட்டி போட வைத்து பிரம்பால் அடித்துள்ளார்

தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மரியா ஷில்பா. இவர், 10ம் வகுப்பில் படிக்கும் சில மாணவர்களின் கைகளில் பிரம்பால் அடிப்பது, பள்ளி வராண்டாவில் முட்டியிட செய்வது போன்ற காட்சிகள், வைரலானது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஆசிரியை மரியா ஷில்பாவை,'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel