Breaking

Tuesday, March 10, 2026

இன்றைய செய்திகள் 10.03.2026(செவ்வாய்க்கிழமை)


🌹நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷத்தை மாற்றவும்,ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தை காட்டவும் தெரிந்தவர்களே, மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.!

🌹🌹அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு, பெரும்பாலும், வெளிப்படையான வெறுப்பைக் காட்டிலும்,அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.!!

🌹🌹🌹ஒருவர் இப்படி தான் என மனதால் தீர்மானித்து விட்டால்... அவர் நல்லதே செய்தாலும் மனம் குறைகளை மட்டும்தான் தேடும்...

அவர் நல்லவராகவே இருந்தாலும் குறைகளை மட்டும் தான் சொல்ல தோன்றும்...

இதுவே மனித இயல்பாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️2025-2026 ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் - தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 11 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

⛑️⛑️ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த தட்டச்சர்களை விடுத்து அமைச்சு பணியாளர்களுக்கு உண்டான ஆசிரியர் பணி மாறுதல் என்பது இல்லை என தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்தும், வயது தளர்வு வழங்குவது குறித்தும் இயக்குநர் அவர்களின் தெளிவுரை - குரல் பதிவு வெளியீடு.

⛑️⛑️திட்டமிட்டபடி நீட் தேர்வு மே 3, 2026 அன்று நடைபெறும் - NTA

⛑️⛑️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு.

⛑️⛑️தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய 12 ம் வகுப்பு மாணவன்.முதலில் தேர்வெழுத அனுப்ப மறுத்த உறவினர்கள். மாணவனின் எதிர்காலத்தை கருதி உடனடியாக தலையிட்டு தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியர்.. தேர்வுக்கு பின் தனது காரிலேயே மாணவனை அழைத்து சென்று அவரது வீட்டில் விட்ட தலைமை ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்..

🍒🍒100 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை கடந்துள்ளது.

ஈரான் ஹோர்மோஸ் நீரிணையை மூடியதால் உலகளாவிய விநியோகத்தில் பாதிப்பு.

இதன் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 18% உயர்ந்து 110 டாலர் வரை சென்றது.

⛑️⛑️"புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்"

ஈரான் அணு அச்சுறுத்தல் முழுமையாக முடிவுக்கு வந்தால் உலகளவில் எண்ணெய் விலை விரைவாக குறையும்.

குறுகிய காலத்திற்கு எண்ணெய் விலை உயர்ந்தாலும், அது உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் செலுத்த வேண்டிய சிறிய விலையே.

இதை புரிந்துகொள்ளாதவர்கள் முட்டாள்கள்.

தனது Truth Social சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு.

⛑️⛑️வீட்டு உபயோக சிலிண்டர் மீது முக்கியத்துவம்:

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் உற்பத்தி குறைப்பு என தகவல்..

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

வீட்டு உபயோக சிலிண்டர் 1 வைத்திருந்தால் 21 நாட்களில் புக்கிங் செய்யலாம்..

வீட்டு உபயோக சிலிண்டர் 2 வைத்திருந்தால் 30 நாட்களில் புக்கிங் செய்யலாம்

⛑️⛑️விஜய் ஆஜராவது சந்தேகம்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகமாட்டார்; வழக்கறிஞர் மூலம் ஆஜராவதில் இருந்து விலக்கு கோர விஜய் தரப்பு முடிவு என தகவல்.

இதே வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து 2 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்; இன்று முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ளதை ஒட்டி விஜய் ஆஜராக மாட்டார் என தகவல்.

⛑️⛑️புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 வரவு வைப்பு.

தமிழகத்தை போல் புதுவை மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு.

சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு மார்ச், ஏப்ரல் என இரு மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,500 உதவித் தொகையை சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

⛑️⛑️வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்ற பக்தர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய, கெம்பட்டி சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதில் ஏற்பட்ட 3வது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது

⛑️⛑️பாக்.,-ல் பெட்ரோல் விலை உயர்வு

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 321 ரூபாயாகவும், டீசல் 335 ரூபாயாகவும் உயர்வு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்

⛑️⛑️சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் மதுரைக்கு துணை ராணுவத்தினர் வந்தடைந்தனர்.

⛑️⛑️தங்கம் விலை குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஒரு சவரன் ரூ.1,19,600க்கும், ஒரு கிராம் ரூ.14,950க்கும் விற்பனை ⛑️⛑️மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு

பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

⛑️⛑️புதிய தலைவருக்கும் டிரம்ப் வார்னிங்

``ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வாகியுள்ள மோஜ்தபா காமேனி, அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது. அயதுல்லா அலி காமேனியின் மகனான மோஜ்தபா தகுதியற்றவர்''

* டிரம்ப் விமர்சனம்

⛑️⛑️இன்று (மார்ச் 10) காலை 10 மணிக்கு, தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு

⛑️⛑️மார்ச் 12ல் தவெக போராட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 12ல் தவெக போராட்டம் அறிவிப்பு

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் போராட்டம் குறித்து அறிவிப்பு

⛑️⛑️கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்”

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

⛑️⛑️கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை விற்க G7 அமைப்பு பரிசீலனை!

கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுக்க, தங்கள் நாடுகளின் எண்ணெய் இருப்பை சர்வதேச சந்தையில் விற்க G7 பரிசீலனை.

G7 நாடுகளின் சுமார் 30% எண்ணெய் இருப்பை (400 மில்லியன் பீப்பாய்கள்) சந்தையில் விற்க திட்டம் என தகவல். இச்செய்தி வெளியான 2 மணி நேரத்தில் எண்ணெய் விலை $15 சரிந்து $105க்கு கீழ் வர்த்தகம்

⛑️⛑️இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2371 புள்ளிகள் குறைந்து 76,558 புள்ளிகளில் வர்த்தகம்.

தேசிய பங்குச்சந்தை எண்கள் நிஃப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் வர்த்தகம்.

மத்திய கிழக்கு போரால் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகம்

⛑️⛑️'தாய்க்கிழவி' திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியது

⛑️⛑️தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும், தே.மு.தி.க. சார்பில் சுதீஷும், பா.ம.க. சார்பில் அன்புமணியும் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

⛑️⛑️தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தவெகவுடன் பேச்சு நடத்தவில்லை; விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி என்பதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி; தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்

அதிமுக - பாஜக கூட்டணியில் துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு கொடுக்க உள்ளதாக வெளியான செய்திக்கு நயினார் நாகேந்திரன் பதில்

⛑️⛑️தஞ்சையில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற தவெக தலைவர் விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவ செலவை பற்றி கவலைப்பட வேண்டாம், தான் பார்த்து கொள்கிறேன் என அமைச்சர் உறுதி ⛑️⛑️நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி தாக்கல் செய்த பொதுநல மனு

மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

⛑️⛑️ஈரான் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

"தனது தந்தையின் பணிகளை மொஜ்தபா கண்ணியத்துடன் தொடர்வார். கடும் சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை அவர் ஒன்றிணைப்பார்; ஈரானுடன் ரஷ்யா உறுதியாக நிற்கும்"

-ரஷ்ய அதிபர் புதின்

⛑️⛑️ “சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர்

ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்

எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்”

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️திருவனந்தபுரம் வந்த ‘டி20 உலக கோப்பை சாம்பியன் மற்றும் தொடர் நாயகன்’ சஞ்சு சாம்சன் - மாநில அரசின் சார்பில் வரவேற்ற அமைச்சர் சிவன் குட்டி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment