இன்றைய செய்திகள் - 12.03.2026 (வியாழக்கிழமை)



🌹மனதில் இருக்கும் நியாயமான கேள்விகளை எல்லாம் கேட்டுவிட்டால் மருந்துக்கு கூட ஒரு உறவும் நிலைக்காது.!

🌹🌹புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.!!

🌹🌹🌹நாலு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட... நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறப்பான செயலாகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு ஃபோனாவது செய்து அப்பா, அம்மாவிடம் நலம் விசாரியுங்கள். இந்தஅக்கறையும், அன்பும்தான் உங்களுடைய Career முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும்"

UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️"தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னும் அதிகரிக்க வேண்டும்"

நாட்டிலேயே மிகக் கடினமான தேர்வு UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுதான். தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இன்னும் அதிகரிக்க வேண்டும்.

நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது

-UPSC தேர்வு வெற்றியாளர்கள் பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

⛑️⛑️நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கைக்கு எதிரானது; அப்பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தமிழ்நாட்டில் உறைவிட வசதியுடன் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பயின்ற 1340 மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் அகில இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்

சமகிரக சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது; ஏற்கனவே ஏற்றுள்ள தனது கடமையை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பிரமாணப் பத்திரத்தில் தகவல்

⛑️⛑️முதலூர் மாணவன் வெற்றி!

முதலூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் ஊரக திறனாய்வு தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவன் மனாசேஜெரித் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

வெற்றி பெற்ற மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

⛑️⛑️தேர்வு நேரத்தில் அவசரத் தேவைகள் இருப்பின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மட்டும் அலைபேசி பயன்படுத்த` அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

⛑️⛑️கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

⛑️⛑️தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு அரசு

⛑️⛑️ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு,மனை போன்ற சொத்துகளை வாங்குவோர் பத்திரப் பதிவின்போது PAN எண் அளிப்பதில் இருந்து விலக்கு.

👉ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது புதிய வருமான வரி சட்டத் திருத்தம்.

⛑️⛑️வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கும் 5,000 டன் டீசல்

இந்தியாவிலிருந்து பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்கு குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது.

"இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும், ஆறு மாதங்களுக்குள் 90,000 டன் டீசல் வங்கதேசத்திற்கு வழங்க வேண்டும்.."

-வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்

⛑️⛑️எரிபொருள் தட்டுப்பாடு.. விமான கட்டணம் உயர்வு.!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வு.

இதனால் ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது.

சர்வதேச விமானங்களுக்கு ரூ.930 - ரூ.4,592 வரை கட்டண உயர்வு

உள்நாட்டு விமானங்களுக்கு ரூ. 400 வரை கட்டண உயர்வு

சர் சார்ஜ் என்ற பெயரில் ஏர் இந்தியா கட்டணத்தை உயர்த்தியது.

இந்த கட்டணம் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

⛑️⛑️“ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம்“

“அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க மாட்டோம்''

அமெரிக்கா அதிபர் டிரம்ப்க்கு ஈரான் அரசு எச்சரிக்கை

⛑️⛑️வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன்,

ஹோட்டல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை.

⛑️⛑️பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை, 234 தொகுதிகளிலும் தனித்தே விசில் சின்னத்தில் போட்டி ?தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்.

⛑️⛑️தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

⛑️⛑️Gasஆல் ரத்தாகும் திருமணங்கள்..?

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல்

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை

⛑️⛑️திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

⛑️⛑️திருச்சி விமான நிலையத்திற்கு

பட்டு வேட்டி சட்டையில் வந்த பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு

⛑️⛑️மதுரையைத் தொடர்ந்து இன்றைய திருச்சி அரசு நிகழ்ச்சியிலும் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பிரதமர் மோடி உரை

⛑️⛑️பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தாய்மாமன் சீர் கொண்டு வருவது போல பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருகிறார்”

திருச்சியில் என்.டி.ஏ. பரப்புரைக் கூட்டத்தில்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்ச. ⛑️⛑️மனைவியிடமே செலவுக்கு பணம் கேட்பேன்

எனது நிதி ஆதாரங்கள் அனைத்தையும் என்னுடைய மனைவியே கவனித்துக் கொள்கிறார்

எனது தனிப்பட்ட செலவுகளுக்கு கூட மனைவியிடமே கேட்டு பெறுவேன்

மனைவி சிறப்பாக நிதியை கையாள்வதால் தான் என்னால் தயாரிப்பாளர் ஆக முடிந்தது

-‘தாய் கிழவி’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

⛑️⛑️ஈரான் மீதான போர் எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம். ஈரான் மீதான போரை முடிக்க நினைக்கிறேன். ஈரானை குறிவைக்க அங்கு தற்போது எதுவும் இல்லை''

- டிரம்ப்

⛑️⛑️புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்திய இண்டேன்

‌‌
Smart Booking

தமிழ்நாட்டில், கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல் படாதது குறித்த புகார்களைத் தொடர்ந்து புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்திய இண்டேன்...*

வாட்ஸ்அப், இண்டேன் ஆயில் மொபைல் செயலி மற்றும் SMS மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு.

WHATSAPP மூலம் கேஸ் புக் செய்ய:

👇

𝟳𝟱𝟴𝟴𝟴𝟴𝟴𝟴𝟮𝟰

செயலி மூலம் கேஸ் புக் செய்ய

👇

INDIAN OIL APP

SMS மூலம் கேஸ் புக் செய்ய

👇

𝟳𝟳𝟭𝟴𝟵𝟱𝟱𝟱𝟱𝟱

MISSED CALL

👇

𝟴𝟰𝟱𝟰𝟵𝟱𝟱𝟱𝟱𝟱

ஸ்மார்ட் புக்கிங் வசதி:

👉தினமும் காலை 𝟭𝟬 முதல் மாலை 𝟲 மணி வரை

#Gas | #IndaneLPGGas

⛑️⛑️திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.

👉4 தொகுதிகள்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு*

👉3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுக சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்து.

⛑️⛑️கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்; பிரச்னைகளை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும்

திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

⛑️⛑️மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளால் காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லிப்பூ, அன்று மாலைக்குள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்

பிரதமர் மோடி பேச்சு

⛑️⛑️புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,655 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்

மேலும், தமிழ்நாட்டுக்கான 5 புதிய ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையும் அடங்கும்

⛑️⛑️கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இன்று பகல் 12.30 மணி அளவில் பதவியேற்க உள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

⛑️⛑️மூளைச்சாவு அடைந்த பெண் உயிரோடு திரும்பி அதிசயம்

உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த வினிதா (50) என்ற பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது, அது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி ஏறியதால் மீண்டும் உயிருடன் வந்துள்ளார்!

மூச்சு மற்றும் இதயத்துடிப்பு நின்ற நிலையில் வீட்டிற்கு அழைத்து சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

அவர் மூச்சு விடுவதை கவனித்த அவரின் கணவர், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தற்போது வினிதா குணமடைந்து பேசுகிறார்

⛑️⛑️தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.560 உயர்வு

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,960க்கு விற்பனை

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.15,120க்கு விற்பனை

வெள்ளி விலை மாற்றம் இன்றி கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.

⛑️⛑️மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான எல்.கே.சுதீஷ் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel