போட்டித் தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய ‘தேர்வுக் களம்’ செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்


அரசு பணி​களுக்​கான போட்​டித்​தேர்​வு​கள் தொடர்​பான அனைத்து தகவல்​களும் அடங்​கிய ‘தேர்​வுக்​களம்’ செயலி குறித்து மாவட்ட அளவில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்பி உள்​ளிட்ட தேர்வு முகமை​களை அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழக அரசின் மனிதவள மேலாண்​மைத்​துறைச் செயலர் சி.சமயமூர்த்​தி, அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம், ஆசிரியர் தேர்வு வாரி​யம், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம், சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆகிய தேர்வு முகமை​களின் தலை​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்பி உள்​ளிட்ட அரசு பணி​களுக்​கான தேர்வு முகமை​கள் மூலம் பணி​யாளர்​களை தேர்வு செய்​யும் நடை​முறை​களை எளிமைப்​படுத்​தும் வகை​யில், தமிழக அரசு ‘தேர்​வுக்​களம்’ என்ற ஒருங்​கிணைந்த கைப்​பேசி செயலியை அறி​முகப்​படுத்​தி​ உள்ளது.

இந்த செயலி​யில், அரசு பணி​களுக்​கான போட்​டித் தேர்​வு​கள் குறித்த அனைத்து ஆள்​சேர்ப்பு அறி​விப்​பு​கள், அத்​தேர்​வு​களுக்​கான இணை​ய​வழி விண்​ணப்​பம், தேர்வு முடிவு​கள், செய்தி வெளி​யீடு​கள், தேர்​வுக்​கான பாடக் குறிப்​பு​கள், முந்​தைய போட்​டித் தேர்​வு​களின் விடைகளு​டன் கூடிய வினாத்​தாள்​கள், போட்​டித் தேர்​வு​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் தொடர்​பான விவரங்​களை அறிந்து கொள்​ளலாம்.

மேலும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறு​வனம் நடத்​தும் போட்​டித் தேர்​வு​களுக்​கான பயிற்சி வகுப்​பு​களின் காணொலிகள், வேலை​வாய்ப்​புச் செய்​தி​கள் உள்பட செய்​தித்தாள்​களில் அளிக்​கப்​படும் அறி​விப்​பு​கள் ஆகிய​வற்றை தெரிந்து​கொள்ள முடி​யும்.

குறித்த நேரத்​தில் நுழைவுச் சீட்​டு​கள், தேர்வு முடிவு​கள் மற்​றும் முக்​கிய தகவல்​கள் நேரடி​யாக ஆர்​வலர்​களின் கைப்​பேசிக்கு உடனடி​யாக அறிவிக்​கும் வகை​யில் இந்த செயலி வடிவ​மைக்​கப்​பட்டுள்ளது.

இதனால், எந்த தகவலும் தவற​விடாமல் தேர்​வர்​கள் சிறப்​பாக​வும், திறமை​யாக​வும், தேர்​வுக்​கான தயாரிப்பை மேற்​கொள்ள முடி​யும்.

அதோடு ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் உள்​ளிட்ட பணி​களுக்​கான சிவில் சர்​வீஸ் தேர்வு உள்பட மத்​திய அரசின் தேர்வு முகமை​கள் (யுபிஎஸ்​சி, எஸ்​எஸ்​சி) மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​கள் மூலம் நடத்​தப்​படும் போட்​டித் தேர்​வு​கள் குறித்த விவரங்​களை​யும் இச்​செயலி​யில் பெறலாம்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories