Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Monday, March 16, 2026

பொதுத்தேர்வில் ChatGPT - 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - 17 ஆசிரியர்கள் மீது FIR பதிவு

பொதுத்தேர்வில் ChatGPT மூலம் மோசடி.. 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது ChatGPT பயன்படுத்தி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக குற்றச்சாட்டு.

சோதனையில் பீட் பகுதியில் அதிகளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு..

இதனைத் தொடர்ந்து 81 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக 17 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு

மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக 81 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாநில வாரியத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 81 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பித்தல் கருவிகள்

மாணவர்கள் ChatGPT -ஐ பயன்படுத்தி தேர்வில் முறைகேடு செய்ததாகவும், அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக பீடு மாவட்டத்தில் அதிக அளவில் இத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. தேர்வு தொடங்கியவுடன் வினாத்தாள்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வெளியே இருப்பவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வினாக்களை ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தில் பதிவேற்றி, அதற்கான விடைகளை பெற்றுள்ளனர்

பெறப்பட்ட விடைகளை பள்ளியின் பிரிண்டரில் அச்சிட்டு, பின்னர் சிறிய துண்டுகளாக மாற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். சௌசாலா போன்ற பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் நேரடி கண்காணிப்பு செய்யப்பட்டது. இதில் 16 தேர்வு அறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்வு மையங்களில் நடந்த இந்த முறைகேடுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment