Breaking

Friday, March 13, 2026

DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


டிஇஓ முதன்​மைத் ​தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.  வெங்கட பிரியா நேற்று வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 1- சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதி​காரி நேரடி நியமனத்​துக்​கான முதன்​மைத்​தேர்வு மார்ச் 22-ம் தேதி முதல் 25-ம்் தேதி வரை நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களுக்கு தேர்​வுக்​கூட நுழைவுச்​ சீட்டு தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தேர்​வர்​கள் தேர்​வுக்​கூட அனு​ம​திச்​ சீட்டை தங்​களின் ஒரு​முறை பதிவு (ஓடிஆர்) வாயி​லாக விண்​ணப்ப எண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட்டு பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு வெங்கட பிரியா தெரிவித்துள்​ளார்​.

No comments:

Post a Comment