Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Tuesday, March 24, 2026

திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :

திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல் 1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும்.

திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும்.

அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.

Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும்.

அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.

*மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்*:

- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60.

- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.

- Emis-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை நிரப்ப வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம்.

குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும்.

மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை 01.04.2026 முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம்.

நன்றி.

No comments:

Post a Comment