JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, April 9, 2026

2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் - தொடர்பாக.


2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் - தொடர்பாக.

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி/யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் 01.06.2026 திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இவ்வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 01.06.2026 முதல் 03.06.2026 வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. எனவே, 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 04.06.2026 (வியாழன் கிழமை) அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

School Reopen Proceedings - Download here

No comments:

Post a Comment