Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Saturday, April 25, 2026

சென்னை பல்கலை.யில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: இளங்கலை படிப்பில் சேர மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவர்​களுக்​கான இலவச கல்​வித் திட்​டத்​தில் இளங்​கலை படிப்​பு​களில் சேர மே 23-ம் தேதிக்​குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை பல்​கலைக்​கழகத்​தின் பதி​வாளர் ரீட்டா ஜான் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக சென்னை பல்​கலைக்​கழக இலவச கல்​வித் திட்​டம்’ என்ற சிறப்பு திட்​டத்தை நடை​முறைப்​படுத்தி வரு​கிறது.

அந்த வகை​யில், வரும் கல்வி ஆண்​டில் (2026-2027) இந்த இலவச கல்​வித் திட்​டத்​தின் கீழ் சென்னை பல்​கலைக்​கழக இணைப்பு அங்​கீ​காரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்​லூரி​கள் மற்​றும் தனியார் சுயநிதி கல்​லூரி​களில் இளங்​கலை படிப்​பு​களில் சேர விண்ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

விண்​ணப்​ப​தா​ரர் 2025-2026-ம் கல்வி ஆண்​டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்​றவ​ராக இருக்க வேண்​டும். பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய மாணவர்​கள், ஆதர​வற்ற மாணவர்​கள், தாய், தந்​தையை இழந்த மாணவர்​கள், குடும்​பத்​தில் பட்​டப்​படிப்​புக்​குச் செல்​லும் முதல் தலை​முறை மாணவர்​கள், மூன்​றாம் பாலினத்தவர் ஆகியோ​ருக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும். குடும்ப ஆண்டு வரு​மானம் ரூ.3 லட்​சத்​துக்​குள் இருக்க வேண்​டும்.

இந்த திட்​டத்​தின் முழு விவரங்​கள் மற்​றும் பதிவேற்​றம் செய்ய வேண்​டிய சான்​றிதழ்​களின் விவரங்​கள் பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.unom.ac.in) கொடுக்​கப்​பட்​டுள்​ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளி​யான தேதி​யில் இருந்து 15 நாட்​களுக்​குள் (மே 23) விண்​ணப்​பத்தை பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அனைத்து சான்​றிதழ்​களு​டன் முறை​யாக பதிவேற்​றம் செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​கள் மட்​டுமே ஏற்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்ளது.

No comments:

Post a Comment