Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Tuesday, April 21, 2026

தேர்தல் பணி - Reserve-ல் இருந்தாலும் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது - CEO Proceedings

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொலைபேசி செய்தி நாள்.20.4.2026.

தேர்தல்கள் - சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026- வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் வகுப்புகளில் தவறாது கலந்து கொள்ளவும், தேர்தல் பணியாற்றவும் அறிவுறுத்துதல் - சார்பாக

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்/ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் வகுப்புகளில் தவறாது கலந்து கொள்ளவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணியை எந்தவித தவிர்ப்போ, விலக்கோ கோராமல் மிகுந்த கவனத்துடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது.

தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்களை தத்தமது அலுவலகப் பணியாளர்கட்கு இதுகுறித்து தெளிவான அறிவுரைகள் வழங்கிட கேட்டுக் கொள்ளலாகிறது. தேர்தல் அலுவலர்கள் எவருக்கேனும் காத்திருப்பு நிலையில் (Reserve) பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால் எக்காரணம் கொண்டும் முறையான விடுவிப்பு ஆணை பெறாமல் பயிற்சி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. தேர்தல் பணிகளை / பயிற்சி வகுப்புகளை காத்திருப்பு நிலை (Reserve) உட்பட புறக்கணிப்பவர்கள் மீது தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் அனைத்து நிலை ஆசிரியர்கள்/பணியாளர்களின் கவனத்திற்கு இதன் மூலம் கொண்டுவரப்படுகிறது.

No comments:

Post a Comment