Search This Blog

Friday, June 12, 2026

6 அரசு பள்ளி மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு

0 comments
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் அஜாக்கிரதை காரணமாக அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துகள் அரங்கேறியுள்ளன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த இந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 6 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


மன்னார்குடியில் கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் பலி!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி முடிந்து தங்களின் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், சாலையில் நடந்து சென்ற மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியதில், 4 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா அல்லது தூக்கக் கலக்கத்தில் காரை இயக்கினாரா என்ற கோணத்தில் மன்னார்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை விபத்து சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு!
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment