JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, June 7, 2026

சிறப்பு நிலை பெற ஏற்பாடுகள் / விண்ணப்பங்கள் தயாரிப்பு சந்தேகங்கள் விளக்கங்கள்

 நண்பர்களே வணக்கம் 🙏

1/6/26 சிறப்பு நிலை பெற ஏற்பாடுகள்/விண்ணப்பங்கள் தயாரிப்பு நிலையில் பல நண்பர்கள் வாழ்த்துகள்.💐💐💐

கூடுதல் சந்தேகங்கள்

1) 1/6/2006 க்கு பிறகு ஊதியம் இல்லா விடுப்பு எடுத்திருந்தால்?

இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும்

அ) மருத்துவ சான்றிதழ் *இன்றி* ஊதியமில்லா விடுப்பு எனில்

சிறப்பு நிலை தள்ளிப் போகும்...

ஆ) *மருத்துவ சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு* எனில் சிறப்பு நிலை *தள்ளிப் போகாது* 

சில நண்பர்கள், loss of pay என்றாலே தள்ளிப் போகும் என்பதாக நினைக்கிறார்கள்....

கிடையாது EOL/LOP  with MC எனில் அது பணிக்காலமாக தான் கருத வேண்டும்... ஆண்டு ஊதிய உயர்வு/ தேர்வு நிலை/ சிறப்பு நிலை என எதுவும் தள்ளிப் போகாது 

(Ref  FR 26, Bhavani Sagar training material) ...

நாம் தான் பவானி சாகர் அடிப்படை பயிற்சி எடுத்து இருக்க மாட்டோம்...

DEO office staff எல்லோரும் அடிப்படை பயிற்சி முடித்து இருப்பார்கள் அவர்களுக்கு எல்லாம் தெளிவாக தெரியும்

2) Jacto Geo போராட்ட காலம்?

2021 க்கு முன் போராட்ட காலங்கள் முறைப்படுத்தப்பட்ட உள்ளது ..

( சில இடங்களில் 4/10/2018 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - ஊதிய பிடித்தம் செய்து உள்ளனர் - அது தற்செயல் விடுப்பு நிகழ்வு என்பதால் அரசு அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை/ முறைப்படுத்த தேவையும் எழவில்லை)

3) 18/11/2025 ஒரு நாள் போராட்டம்?

ஆம் இந்த போராட்டம் காலம் இதுவரை முறைப்படுத்தப் படவில்லை..

போராட்டத்தில் கலந்து கொண்டு ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு பணிப் பதிவேட்டில் பதிவு செய்து இருந்தால் 

தற்போது சிறப்பு நிலை *ஒருநாள் தள்ளிப் போகும்* ..

1/6/26 க்கு பதிலாக 2/6/26 முற்பகல் முதல் சிறப்பு நிலை 🙏

( இந்த ஒரு நாள் போராட்ட காலம் முறைப்படுத்தப்பட்டால் பின்னர் revised special grade order வாங்கி கொள்ளலாம்) 

3) தொடக்க கல்வித்துறை நண்பர் ஒருவர் கேட்டு இருந்தார்கள்...

அவர் BT , middle school HM ஆக இரண்டு முறை பதவி உயர்வு வழங்கப்பட்டு, 

Junior most என்பதால் மீண்டும் BT ஆக தற்போது பணி புரிந்து வருகிறார் ( middle school HM ஆக இருந்த அந்த 15 மாத காலத்தை தற்போது சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ளலாமா?

ஆம்...

உயர் பதவியில் இருந்த காலத்தை கீழ் நிலை பதவி தேர்வு/சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம்

4) BT/PG பதவி உயர்வு பெற்று விடுகிறார்கள்..

மீண்டும் பதவி உயர்வு துறப்பு செய்து பழைய படி BT/PG ஆக பணியில் தற்போது தொடர்ந்தால் அந்த காலத்தை தேர்வு நிலை/ சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ளலாமா?

ஆம் பதவி உயர்வு பெற்று ஓர் ஆண்டு காலத்திற்கு உள் மீள் உரிமை அடிப்படையில் தற்காலிக துறப்பு செய்து மீண்டும் பழைய பணியிடத்தில் தற்போது பணி புரிந்து வருபவர்கள்...

மேல் நிலைப் பணிக்காலத்தை தற்போது சிறப்பு நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம் 

5) incharge HM? 

High school incharge HM (BT) எனில் DEO sec இல் வாங்கி கொள்ளலாம் no problem...

HR sec school in charge HM   (PGT) எனில் அவரின் பணிப் பதிவேடு CEO அவர்களிடம் இருக்கும்... 

கருத்துருக்கள் தயாரித்து CEO சார் கையெழுத்து இட்டு DEO sec இடம் சிறப்பு நிலை பெற விண்ணப்பம் செய்வது சரியாக இருக்காது...

எனவே மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு CEO அவர்களே தேர்வு நிலை/சிறப்பு நிலை வழங்குவது போல் HSS HM incharge PGT க்கு CEO அவர்களே சிறப்பு நிலை வழங்கலாம் என நான் கருதுகிறேன்...

கூடுதல் விவரங்களுக்கு தங்களின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறேன்...

மிகக் குறைந்த அளவே மேற்காண் நிகழ்வுகள் இருக்கும்...

இருப்பினும் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள இந்த பதிவு 😊

தகவலுக்காக.

க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம் 🙏
6/6/26

No comments:

Post a Comment