Sunday, June 28, 2026

ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி | உதவி இயக்குநர் இடமாற்றம்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


Irregularities in Teachers' Counseling | Assistant Director Transferred
Education

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் கலந்தாய்வு குளறுபடிகள் குறித்த நாளிதழ் செய்தி

சென்னை, ஜூன் 25

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில், 100 ஆசிரியர்கள் பங்கேற்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குளறுபடிக்கு காரணமானவர் எனக் கூறி, உதவி இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 16ல் துவங்கி, 18ல் நிறைவடைந்தது. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெறும் நோக்கில், சிலருக்காக நிபந்தனைகளை தளர்த்தி உள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் நேரடி நியமனங்கள் வாயிலாக, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு, 81 முதுகலை பட்டதாரி ஆசியர்கள் உட்பட 100 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னரே, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நடந்து முடிந்த பொது மாறுதல் கலந்தாய்வில், புதிதாக பணியில் சேர்ந்த 100 ஆசிரியர்களும், பங்கேற்கும் வகையில், நிபந்தனைகள் திருத்தப்பட்டதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தில், கல்வி பிரிவில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆதிமூலம், கடலுார் மண்டல உதவி இயக்குநராக, நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.

அப்பதவியில் இருந்த சுப்பிரமணியன், இயக்குனரகத்தில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஆதிதிராவிடர் நல இயக்குநர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார். அதில், கலந்தாய்வில் ஏற்பட்ட இடையூறு காரணமாகவும், நிர்வாக நலன் கருதியும், ஆதிமூலம் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application