Monday, July 6, 2026

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு


அரசு தேர்​வு​கள் இயக்​குநர் கே.சசிகலா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு: கடந்த மார்ச், ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்​வில் விடைத்​தாள் நகல் பெற்ற தேர்​வர்​கள் மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு செய்ய விண்​ணப்​பிக்க ஜூன் மாதம் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டது.

விடைத்​தாள் மறும​திப்​பீடு மற்​றும் மறுகூட்​டல் செய்​யும் பணி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடைந்​தது. தற்​போது மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​றம் உள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் அரசு தேர்​வுத் துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) இன்று (ஜூலை 6) பிற்​பகல் வெளி​யிடப்​படும்

No comments:

Post a Comment