Subscribe Us

Thursday, July 9, 2026

திருத்திய பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை சார்ந்து DEE செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜீன் 2026 மாதத்தில் நடத்துதல் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கியது தொடர்பாக திருத்திய பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் சார்ந்து.

பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற்றதால், அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுகள் சில நிருவாக காரணத்தினால் மாற்றியமைக்கப்பட்டது.

பார்வை 3-ல் காணும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு (W.P.No.34369 of 2022-ன்) இடைக்காலத் தீர்ப்பாணையில் தெரிவிக்கப்பட்டவாறு திருத்திய பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இவ்விவரத்தினை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவுபடுத்துமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் குறிப்பாக இவ்வழக்கு தொடர்ந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 ஆசிரியர்களையும் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வில் மீளவும் பங்குபெற அனுமதிக்குமாறு நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Counselling revised schedule.pdf

👇👇👇

No comments:

Post a Comment

Popular Feed