Wednesday, July 1, 2026

அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே அலட்சியம் வேண்டாம்! GBM 2.0 - உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க கடைசி வாய்ப்பு!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தற்போது ஒரு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கருவூலத் துறையிலிருந்து (Treasury Department) ஜிபிஎம் 2.0 (GBM 2.0) தொடர்பான பணிகளை மிக விரைவாக முடிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு GBM 2.0 அப்டேட்: தமிழ்நாடு அரசு கருவூலத் துறை மூலம் ஜிபிஎம் 2.0 (GBM 2.0 - Global Beneficiary Master) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 11 இலக்கத் தனித்துவ ஐடி உருவாக்கப்படுகிறது. IFHRMS போர்ட்டலில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் PF விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது குறித்த முழுமையான வழிகாட்டி பற்றி பார்ப்போம்.

*ஜிபிஎம் 2.0 (GBM 2.0) என்றால் என்ன?

ஜிபிஎம் 2.0 என்பதன் முழு வடிவம் Global Beneficiary Master என்பதாகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு அரசு ஊழியரின் தனிப்பட்ட தரவுத் தொகுப்பு (Personal Data). உங்கள் வங்கி கணக்கு எண் (Bank Account), ஆதார் (Aadhaar), பான் கார்டு (PAN Card), மொபைல் எண் (Mobile) மற்றும் மின்னஞ்சல் (E-mail) முகவரி போன்றவை உங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும். ஒரு ஊழியரின் தரவு மற்ற ஊழியரோடு எந்த இடத்திலும் மேட்ச் ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த Data Cleansing பணி நடைபெறுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு எனத் தனியாக 11 இலக்க GBM ID உருவாக்கப்படும்.

*உங்களுடைய GBM ID மற்றும் தரவுகளைச் சரிபார்ப்பது எப்படி?

ங்களுக்கு GBM ID உருவாகிவிட்டதா அல்லது உங்கள் தரவுகளில் ஏதேனும் பிழைகள் (Errors) உள்ளதா என்பதை அறிய கீழ்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்.

• IFHRMS போர்ட்டலில் Initiator Login செய்யவும்.

• Other Application என்பதற்குச் சென்று, அதில் GBM 2 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

• அடுத்து Beneficiary -> DTO Beneficiary Details என்பதை கிளிக் செய்யவும்.

அதில் உள்ள Know Your Option பகுதிக்குச் செல்லுங்கள்.

உங்கள் பெயர், GBM ID, ஆக்டிவ் ஸ்டேட்டஸ் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.

*உங்களுடைய GBM ID-ல் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா எப்படி பார்ப்பது?

• E-Service -> Human Resource -> GBM Report Viewer மூலம் ஒரு எக்செல் (Excel) கோப்பைத் தரவிறக்கம் செய்யவும்.

• அதில் Exception Value மற்றும் Exception Remark என்ற பகுதியில் உங்கள் தரவுகளில் உள்ள பிழைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

உங்களுடைய GBM ID-ல் எப்படி திருத்தம் செய்வது?

அரசு தரப்பில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள சில முக்கியமான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

*பெயர் மற்றும் பிறந்த தேதி

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பணிப் பதிவேடு (SR), IFHRMS ப்ரொபைல், மற்றும் CPS/GPF அக்கவுண்ட் ஸ்லிப் ஆகிய மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயரின் இனிஷியல் (Initial) எப்போதும் பெயருக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் (CAPITAL LETTERS) இருக்க வேண்டும்; நடுவில் புள்ளி (Full Stop) வைக்கக்கூடாது.

பணியேற்ற தேதி (DOJ)

உங்கள் SR புத்தகத்தில் உள்ள பணியேற்ற தேதியும், IFHRMS மற்றும் CPS/GPF ஸ்லிப்பில் உள்ள தேதியும் சரியாகப் பொருந்த வேண்டும்.

PF வகை (PF Type)

சிலருக்கு CPS/GPF ஆப்ஷன் செலக்ட் செய்ய முடியாமல் மறைந்திருக்கும் (Hide). இதற்கு ஒரு சிறிய ட்ரிக் உள்ளது: Employee Category-க்குச் சென்று 'Government Servant' என்பதை மாற்றிவிட்டு, மீண்டும் 'TN Government' எனத் தேர்ந்தெடுங்கள். இப்போது அந்த ஆப்ஷன் காண்பிக்கப்படும்.

மொபைல் எண்

கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால், இருவருக்கும் தனித்தனி மொபைல் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒரே எண்ணைப் பகிரக்கூடாது.

*GBM ID திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?

நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் உரிய ஆதாரங்களை 1 MB அளவிற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

• பெயர் / பிறந்த தேதி மாற்றம் (SR புத்தகத்தின் முதல் பக்கம்)

• பணியேற்ற தேதி மாற்றம் (SR புத்தகத்தின் 58-வது பக்கம்)

• தந்தை பெயர், ஆதார் கார்டு, பான் கார்டு நகல் அவசியம்

• CPS / GPF எண் திருத்தம் (அலாட்மெண்ட் நம்பர் (Allotment Number) நகல்)

இந்த விவரங்கள் அனைத்தையும் சரியாகப் புதுப்பித்துவிட்டால், உங்களுக்கு வர வேண்டிய சம்பளம் மற்றும் இதர பணப் பலன்கள் எந்தத் தடையுமின்றி உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இல்லையெனில், அவை நிறுத்தி வைக்கப்பட (Hold) வாய்ப்புள்ளது. எனவே இந்த GBM 2.0 பணிகளை விரைந்து முடியுங்கள்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application