JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு/நிதியுதவி/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1மற்றும் தாள் 2 முறையே 04.07.2020 மற்றும் 05.07.2026 ஆகியநாட்களில் நடைபெறுதல். தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான சில அறிவுரைகள் :
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ள தங்கள் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேற்காண் தேர்வு எழுதுவது சார்ந்து சில அறிவுரைகள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
1 தேர்வு நடைபெறும் நாள்.
Paper-1 04.07.2026
Paper-2 05.07.2026
2 தேர்வு நேரம்
பொதுப் பிரிவு - காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
3. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும்.
4. காலை 8,30 மணி முதல் 9.30 மணி வரை பரிசோதனை (Frisking) செய்யப்படும்.Frisking-ன் போது Hall Ticket. Idendity Card முன்னிலைபடுத்தப்பட வேண்டும்.
5. காலை 9.30 மணிக்கு தேர்வு மைய வாயிற் கதவி மூடப்படும். 9.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் யாரும் தேர்வு மையத்தில் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.
6. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket கருமை நிற பந்து முனைப் பேனா -2 மற்றும் Idendity Card ஆகியவை மட்டுமே தேர்வு கூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
7. பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket-ல் தேர்வர்களின் புகைப்படம் இல்லாது இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ பாஸ்போர்ட் அளவு புகைப்படம் Hall Ticket-ல் ஒட்டப்பட வேண்டும் என்பதால் தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படத்தினை வரும்போது உடன் எடுத்துவர தெரிவிக்கப்படுகிறது.
தேர்வின் போது தேர்வர்கள் OMR Answere Sheet-ல் அடித்தல் திருத்தம் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு தேர்வர்களுக்கு ஒரு OMR Answere Sheet மட்டுமே வழங்கப்படும்.
மேற்கண்ட நெறிமுறைகளை கடைபிடித்து ஆசிரியர் தகுதித் தேர்வினை சிறப்பாக எழுதிட தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி / நகராட்சி /தொடக்க/ நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு/ நிதியுதவி / தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிக்கூட வேலைகள்


No comments:
Post a Comment