Subscribe Us

Sunday, August 23, 2026

விமான நிலையங்களில் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய ரூல்.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக, சர்வதேச விமான நிலையங்களில் நடைமுறையிலிருந்த ஒரு முக்கியப் பாரம்பரிய நடைமுறை மாற்றப்பட உள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் போர்டிங் பாஸ்களில் (Boarding Pass) கைப்பட முத்திரை (Physical Stamping) குத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் (Bureau of Immigration - BOI) இந்த முடிவை அனைத்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்களில் பிசிகல் முத்திரை குத்துவது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தையும், நேர விரையத்தையும் ஏற்படுத்தி வந்ததைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் போர்டிங் பாஸ்: இனி பிசிகல் போர்டிங் பாஸ்களுக்குப் பதிலாக, மொபைல் அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் (e-boarding passes) குடிவரவு (Immigration) கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.

கைமுறையாக முத்திரை குத்தும் முறை நீக்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் குடிவரவு சோதனைகளுக்கான வரிசையில் பயணிகள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும். இந்திய அரசு விமான நிலையங்களில் டிஜிட்டல் மற்றும் பேப்பர்லெஸ் (Paperless) சேவைகளை ஊக்குவித்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு அமல்படுத்தப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் முத்திரை குத்தும் ஒரு படி மட்டுமே தவிர்க்கப்படுகிறதே தவிர, வழக்கமான பிற பாதுகாப்பு சோதனைகள், விசா சரிபார்ப்பு மற்றும் இமிகிரேஷன் நடைமுறைகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெறும். சர்வதேசப் பயணத்திற்குச் செல்லுபடியாகும் போர்டிங் பாஸ் கட்டாயம் தேவை. ஆனால், அதில் முத்திரை பெற வேண்டிய அவசியமிருக்காது. செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், சர்வதேச விமானப் பயணங்களை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed