JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் 2026-27-ம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் ஆக.14-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில். மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின்கீழ் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும். அரசு வழங்கும் இலவச மிதிவண்டி, சீருடை, ஷூ, பயிற்சிக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 9499055642, வாட்ஸ்-அப் எண்- 9499055612 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment