Subscribe Us

Wednesday, August 26, 2026

இன்ஜினியரிங் படிப்புகளில் 7.5% ஒதுக்கீட்டிலே இன்னும் 888 இடங்கள் காலி; துணை கலந்தாய்வு மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: மூன்று சுற்று முடிவில் சுமார் 52000 இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு; துணைக் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு இன்னும் நல்ல கல்லூரிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர் கணிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், துணை கலந்தாய்வு மாணவர்களுக்கு எவ்வளவு இடம் இருக்கும்? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து, மூன்றாம் சுற்றுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், துணை கலந்தாய்வு மாணவர்களுக்கு எவ்வளவு இடம் இருக்கும்? 7.5% ஒதுக்கீட்டில் எவ்வளவு இடங்கள் காலி? என்பது குறித்து கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed