Subscribe Us

Tuesday, August 11, 2026

மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை உயர்த்த குழு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்


‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதற்காக நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது” என்றார்.

தமிழகத்தில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்து, படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது.

No comments:

Post a Comment

Popular Feed