SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Friday, August 14, 2026

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் (இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு) முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன!

🏢 தேர்வு முடிவுகளை அறியும் இடம்:தேர்வர்கள் தாங்கள் பயின்ற மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (DIET) மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக தங்களது தேர்வு முடிவுகளை நேரடியாகச் சென்று அறிந்து கொள்ளலாம்.

🧑‍வட்டாரத் தனித்தேர்வர்கள் (Private Candidates) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலேயே முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் (Xerox) பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வில் தங்களின் விடைத்தாள் நகலினைப் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உரிய தேதிகளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: www.dge.tn.gov.in (விண்ணப்பப் படிவத்தை இந்த அரசுத் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்)

.📅 முக்கிய தேதிகள்:விண்ணப்பத் தொடக்க நாள்: ஆகஸ்ட் 14 (வெள்ளிக்கிழமை) முதல்விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 20 (மாலை அலுவலக நேரத்திற்குள்)📍 சமர்ப்பிக்க வேண்டிய முறை:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (DIET) நேரடியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.💰 விண்ணப்பக் கட்டணம்: ஒரு பாடத்திற்கு: ரூ. 275

மிக மிக முக்கியக் குறிப்புகள் (Attention Please)

தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்! எனவே நேரடியாகச் சென்று மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.🔍 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல் (Re-totalling) மற்றும் மறுமதிப்பீட்டிற்கு (Revaluation) விண்ணப்பிக்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment