THAMIZHKADAL TODAY NEWS

முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து

2026-27 ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி (ந.க.எண். 018341/இ1/2026, நாள்: 21.09.2026), அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு:

மதிப்பெண் உள்ளீடு: அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை (100 மதிப்பெண்கள்) பாடவாரியாக ஆசிரியர்கள் EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

கடைசி நாள்: விடைத்தாள்களைத் திருத்திய பின்னர், மதிப்பெண்களை அக்டோபர் 09-க்குள் தவறாமல் உள்ளீடு செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

வகுப்பு 1 முதல் 5 வரை: செயல்முறைகளுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உள்ளீடு செய்ய வேண்டும்.

வகுப்பு 6 முதல் 8 வரை: ஏற்கனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி அக்டோபர் 9-க்குள் பதிவேற்ற வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் குறித்த காலத்திற்குள் மதிப்பெண்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்🙏
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel