THAMIZHKADAL TODAY NEWS

9 நாட்கள் காலாண்டு விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை


தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முன்னர் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி செப்டம்பர் 24-ந் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 24) நிறைவு பெற உள்ளது. அதேவேளையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள், நாளை (செப்டம்பர் 25) வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்களுக்கு வழக்கமாக விடப்படும் காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் (காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) உட்பட மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காலாண்டு விடுமுறை தினமான 9 நாட்களும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களை முழுமையாக ஓய்வெடுக்க அனுமதிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel