THAMIZHKADAL TODAY NEWS

பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்புச் சட்டம் கேட்டு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் திருப்பூர் கிளை சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பிரகாஷ் வரவேற்றார்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பிரபு செபாஸ்டியன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பேசினர்.

இதில், நஞ்சப்பா பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம்’ இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel