THAMIZHKADAL TODAY NEWS

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.10.2026





திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்

குறள் எண்:503

குறள்:

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

பொருள்:

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

பழமொழி :

Speech is silver, silence is golden

அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன். 

 2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

“கல்வி என்பது தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காக மட்டும் அல்ல; வாழ்க்கையை சிறப்பாக வாழக் கற்றுக்கொள்வதற்காகவும் ஆகும்.”

Thought for the Day :

Build habits that carry you forward even when motivation is nowhere to be found

பொது அறிவு : 

1.சர்வதேச முதியோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

அக்டோபர் 1. 

2. முதல் LNG - யில் இயங்கும் ரயில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது? 

 அகமதாபாத் 

English words :

eaves - the edges of a roof that stick out over the walls.

சுவர்களுக்கு மேல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரை விளிம்புகள்

self-reliant - not depending on anyone else 

தற்சார்ஃபடைய

புவியியலும் சுற்றுசூழலும் :

🌧️ காலநிலை:-
தமிழ்நாடு பொதுவாக வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. அதாவது
பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பநிலையும், பொதுவாக அதிக மழைப்பொழிவும் காணப்படும் காலநிலையே “வெப்ப மண்டல காலநிலை” (Tropical Climate) எனப்படும்.🌴 அடர்ந்த காடுகள் மற்றும் பல்வேறு தாவரங்கள் வளர ஏற்ற சூழல். கொண்டதாக இருக்கும் 

NMMS :

MAT 

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை சரியான முறையில் வரிசைப்படுத்துக. 

 (A) நியமனம் 

 (B) விளம்பரம்

 (C) விண்ணப்பம்

 (D) தேர்ந்தெடுத்தல்

 (E) நேர்முகத்தேர்வு 

 (1) BEDCA. (2) CDEBA. (3) BCEDA. (4) CBEDA. 

 விடை: (3) BCEDA

அக்டோபர் 05

உலக ஆசிரியர் தினம்

நீதிக்கதை

 மனமாற்றம்

அடர்ந்த காட்டுப் பகுதியின் அருகே பூஞ்ச ோலை என்ற அழகான கிராமம் இருந்தது. அங்கிருந்த மக்கள் காட்டை நம்பியே தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டனர்.அந்த கிராமத்தில் வீராசாமி என்ற ஏழை மரம் வெட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் மிகவும் நே ர்மை யானவர்; காட்டில் காய்ந்து விழும் மரங்களை மட்டுமே வெ ட்டி விற்று, அதில் கிடை க்கும் சொற்ப வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

அதே கிராமத்தில் ஆனந்த் என்ற பேராசை பிடித்த மற்றொரு விறகு வெ ட்டியும் இருந்தான். காட்டை அழித்தாவது தான் பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்பதே அவனுடைய ஒரே குறிக்கோள்.

ஒரு நாள், இருவரும் விறகு சேகரிக்கக் காட்டிற்குள் வெ குதூரம் செ ன்றனர்.

அப்போதுது திடீரென ஒரு மரத்தின் பின்னால் இருந்து ஒரு காட்டு முனிவர் தோன்றினார். அவர்களின் முன் வந்த முனிவர், "உங்களின் உழை ப்பை க் கண்டுமெச்சினேன். உங்கள் இருவருக்கும் ஒரு வரம் தருகிறேன். உங்களிடம் ஒரு விசித்திரமான மனு (விண்ணப்பம்) தருகிறேன். அதில் நீங்கள் என்ன எழுதினாலும், அது உடனடியாக நிறை வேறும்" என்று கூறி இருவரிடமும் தலா ஒரு மாய மனுவைக் கொடுத்தார.

மனுவைக் கையில் வாங்கிய ஆனந்த், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக எழுதினான்: "எனக்கு இந்த காட்டில் உள்ள அனைத்து மரங்களும் தங்கமரங்களாக மாற வேண்டும். நான் இந்த நாட்டின் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும்."

மறு கணமே , அவனது மனுவில் இருந்தபடியே காட்டின் மரங்கள் அனைத்தும் பளபளக்கும் தங்க மரங்களாக மாறின. ஆனந்த் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவனுக்கு உண்மை புரிந்தது. தாகத்திற்குகுடிக்கக் தண்ணீர் கேட்டபோது, அங்கிருந்த நீர ோடை யும் தங்கமாக உறை ந்திருந்தது. பசிக்கு பழங்கள் பறிக்க முயன்றபோது, மரத்தின் பழங்களும் தங்கமாக இருந்தன. நிழலுக்குக் கூட ஒரு பச்சை இலை இல்லை பேராசையினால் தனக்குக் கிடைக்கவிருந்த அழிவை எண்ணி அவன் கதறி அழுதான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீராசாமி, அமை தியாகத் தனது மனுவில் எழுதினார்: "இயற்கை எப்போதும் போலப் பசுமை யாக இருக்க வேண்டும். பேராசையால் அழியும் மனிதர்களின் மனதில் நல்ல 'மன மாற்றம்' வர வேண்டும்."

அடுத்த நொடியே , தங்கமாக மாறிய காடு மீண்டும் பழை யபடி குளிர்ந்த, பசுமையான மரங்களோடு காட்சியளித்தது. பறவைகள் கீச்சிட்டன, நீரோடை யில் தூய நீர் ஓடியது. தங்கம் மறைந்தாலும், தனக்கு உயிர் பிழைக்க வழி கிடை த்ததை எண்ணி ஆனந்த் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

வீராசாமியின் செயலால் ஆனந்திற்குப் புத்தி வந்தது. பேராசை பெரு நஷ்டம் என்பதை உணர்ந்து அவனுக்குள் ஒரு பெ ரிய மன மாற்றம் ஏற்பட்டது. அன்று முதல் அவனும் காட்டை அழிக்காமல், இயற்கையைப் பொற்றி வாழத் தொடங்கினான்.

நீதி:

பொருட்களின் மீது கொள்ளும் பேராசையைவிட, இயற்கையையும் மனிதநேயத்தையும் மதிக்கும் நல்ல மன மாற்றமே ஒரு மனிதனை உயர்ந்தவனாக்குகிறது.

இன்றைய செய்திகள்

05.10.2026

🗒️பெண் குழந்தைகளின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என ஆசிய தடகளத்தில் பதக்கம் வென்ற அபிநயா பேட்டி அளித்துள்ளார்.

🗒️ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 🗒️தென் 
அமெரிக்காவிலேயே முதலீட்டுக்காக குடியுரிமை வழங்கும் 
முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. 

🗒️ 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உலக சந்தைக்கு விடுவிப்பு, G7 நாடுகள் ஒப்புதல் - பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்


🏀 *ஆசிய விளையாட்டுப் போட்டி* 
🏀பதக்கப் பட்டியலில்  இந்தியா  (21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம்) மொத்தம் 85 பதக்கங்களை வென்று 4-வது இடத்தைப் பிடித்தது.

🏀நிறைவு விழாவில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா தேசியக் கொடியை ஏந்தி வலம் வந்தார். இவர் மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார்.
Today's Headlines
🗒️ Abinaya, who won a medal in the Asian Athletics Championships, said that girls should be given opportunities to identify and encourage their talents.

🗒️ Experts are worried that the growth of AI technology may go beyond human control.

🗒️ Argentina is the first country in South America to offer citizenship in exchange for investment.

🗒️ G7 countries have agreed to release 100 million barrels of crude oil into the world market. This may help reduce petrol and diesel prices.

🏀 Sports News
🏀 Asian Games:
🏀 India won a total of 85 medals — 21 gold, 27 silver and 37 bronze — and secured 4th place in the medal table.

🏀 At the closing ceremony, Indian shooter Neeru Danda carried the national flag. She performed very well and won three medals.

Covai women ICT_போதிமரம்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel