THAMIZHKADAL TODAY NEWS

9-ஆம் வகுப்பு புதிய பாடநூல்: ராம ராஜ்யம் முதல் செங்கோல் வரை; மாணவர்கள் படிக்கப்போவது என்ன?

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் ‘ராம ராஜ்யம்’ போன்ற பாரம்பரிய ஆட்சி முறை விழுமியங்களை உள்ளடக்கி 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய சமூக அறிவியல் பாடநூலை என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டுள்ளது.

எழுதியவர்:Gayathri Mani

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் என்.சி.இ.ஆர்.டி பாடநூலில், ‘ராம ராஜ்யம்’ என்பது “இந்தியாவின் ஆட்சி முறை புரிதலின்” பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 153 பக்கங்கள் கொண்ட இந்தப் புதிய புத்தகத்தில், தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020, கேலோ பாரத் நிதி, தேசிய சுகாதாரக் கொள்கை 2017, மின்-ஆளுமை (e-governance), ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ (Understanding Society: India and Beyond) என்ற தலைப்பைக் கொண்ட இந்தத் பாடநூலின் இரண்டாம் பகுதி, ஆட்சி முறை மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது. வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல் மற்றும் பொருளாதாரம் என தனித்தனி பாடநூல்களாக இருந்த முந்தைய நடைமுறையிலிருந்து மாறுபட்டு, இந்த புதிய உரை வரலாறு மற்றும் அரசியல் அறிவியலுக்கு தலா ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளது.

இதில் உள்ள அத்தியாயம் 4 – ‘ஆட்சி முறை மற்றும் பொதுக் கொள்கை’ (Governance and Public Policy) – தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ பொதுக் கொள்கைக்கான ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிட்டு, அதனை 'தவறவிடாதீர்கள்' (Don’t miss out) என்ற பகுதியில் வைத்துள்ளது. இந்தக் கொள்கையை உருவாக்கிய குழுவில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பதை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், தேசியக் கல்விக் கொள்கை 2020 உருவாக்கத்தின் போது, 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6,600 வட்டாரங்கள், 6,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 676 மாவட்டங்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, சுமார் 2 லட்சம் பரிந்துரைகள் வரப்பெற்றதாக பாடநூல் குறிப்பிடுகிறது. குடிமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பல பரிந்துரைகள், 2020-இல் ஒன்றிய அமைச்சரவையால் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பு இதில் சேர்க்கப்பட்டன. அத்துடன், தேசிய சுகாதாரக் கொள்கை, அதன் இலக்குகள், திட்டங்கள் குறித்தும் இந்தப் பகுதி வெளிச்சம் போடுகிறது. 'கொள்கை ஒருங்கிணைப்பு' என்ற பிரிவு, இந்தியாவின் விளையாட்டுத் துறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட 'கேலோ பாரத் நிதி' திட்டத்தைக் மேற்கோள் காட்டுகிறது.

'யோசனைகளிலிருந்து தொடக்க நிறுவனங்கள் வரை' (From ideas to start up) என்ற அத்தியாயத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத் மற்றும் விக்சித் பாரத் 2047 போன்ற திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஸ்வச்ச பாரத் இயக்கம், கல்வி உரிமைச் சட்டம், பிஎம் போஷன், டிஜிட்டல் இந்தியா, ஜல் ஜீவன் போன்ற திட்டங்களும் இந்த பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆட்சி முறை குறித்து விளக்கும் போது, சோழ வம்சம், மகாபாரதம், ராமாயணம், முண்டக உபநிடதம் மற்றும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் ஆகியவற்றிலிருந்து என்சிஇஆர்டி உதாரணங்களை எடுத்துரைக்கிறது. சபா மற்றும் சமிதி, ‘ராம ராஜ்யம்’ மற்றும் ‘ராஜதர்மா’ ஆகியவற்றில் பிரதிபலிக்கும் யோசனைகள் மற்றும் மதிப்புகளிலிருந்து, அரசியலமைப்பு மற்றும் குடிமக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட நவீன ஜனநாயக முறைக்கு இந்தியாவின் ஆட்சி முறை பற்றிய புரிதல் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ‘ராம ராஜ்யத்தை’ ஒரு முன்மாதிரியான ஆட்சி மாதிரியாகக் கற்பனை செய்தார் என்றும், ‘ராம ராஜ்யம்’ என்பது நாணயம், வெளிப்படைத்தன்மை, கருணை, நலன் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சி மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றின் கொள்கைகளில் வேரூன்றியுள்ளது என்றும் அது மேலும் சேர்க்கிறது.

செங்கோலை ஆட்சி மற்றும் நல்லாட்சியின் பண்பாட்டு அடையாளமாக உயர்த்திக் காட்டும் இந்தப் புத்தகம், நீதிநெறி வழுவாத ஆட்சிக்கு அடையாளமாக செங்கோலைப் பயன்படுத்தும் பாரம்பரியம் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது தொடங்கியது என்று கூறுகிறது. இந்த செங்கோல் 2023-இல் பிரதமர் நரேந்திர மோடியால் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. மேலும், இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு அதீனத்தைச் சேர்ந்த துறவிகள் ஜவஹர்லால் நேருவுக்குச் செங்கோலை வழங்கிய நிகழ்வைப் பற்றிய குறிப்பும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்திய நிறுவனங்கள் ஆட்சி முறையின் பாரம்பரிய யோசனைகள் மற்றும் மதிப்புகளைத் தொடர்ந்து எவ்வாறு ஈர்த்துக் கொள்கின்றன என்பதையும், நவீன ஜனநாயகத்தின் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்கின்றன என்பதையும் இந்தப் பாடநூல் விளக்குகிறது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel