Thamizhkadal WhatsApp Channel

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்


விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

இதுகுறித்து விஐடி பல்கலை. வேந்தர் கோ. விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘‘விஐடி பல்கலை.யின் வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று (அக்.20) தொடங்கியது. https://viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னர் நுழைவுத் தேர்வு ஒரே கட்டமாக 2027 ஏப்.28 முதல் மே 2 வரை நடைபெறும். இந்தியாவில் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தேர்வு மையங்களிலும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories