Thamizhkadal WhatsApp Channel

சிறப்பு ‘டெட்’ தேர்வுக்கு வார இறுதி நாட்களில் நேரடி பயிற்சி


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டிசம்பர் மாதம் நடத்தப்படும் சிறப்பு ‘டெட்’ தேர்வுக்கு எஸ்சிஇஆர்டி சார்பில் நேரடி பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக் கான முதலாவது சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடந்தது. இத்தேர்வை 2 லட்சத்து 15,617 பேர் எழுதினர்.

அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும், தேர்வெழுதிய ஆசிரியர்களில் 1.10 லட்சம் பேர் தோல்வி அடைந்தனர்.

இவர்களுக்கு நேரடி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், எஸ்சிஇஆர்டி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டிசம்பரில் நடத்தப்படும் டெட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியியல் பேராசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள்.

எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories