Thamizhkadal WhatsApp Channel

Dr. A.P.J. Abdul Kalam’s birthday as "Youth Awakening Day" (15.10.2026) – DSE Proceedings


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர், மேதகு. டாக்டர். A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக" கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்திடவும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்" இளைஞர் எழுச்சி நாளான" அக்டோபர் 15 அன்று மாவட்ட அளவில் உயர்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு "இளைஞர் விழிப்புணர்வு பேரணி" நடத்திடவும். பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு.டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் தலைமையாசிரியர் /ஆசிரியர் / உள்ளூர் வல்லுநர் (Local resource person) வாயிலாக சொற்பொழுவு ஆற்றிடவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பார்வை-04ல் காணும் செயல்முறைகளில் செப்டம்பர் மாதம் முதலே மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை 6-8, 9-10 மற்றும் 11-12 வகுப்பு மாணவர்களை தனிக்குழுக்களாக பிரித்து மாவட்ட அளவில் கண்காட்சியினை நடத்தி ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெற்ற மூன்று

மாணவர்களை தெரிவு செய்து அக்டோபர் மாதம் 10-ம் தேதிக்குள் இவ்வியக்கக எம்2 பிரிவின் dsem2section@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு காலதாமதமின்றி அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது

தற்போது மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி இராணிப்பேட்டை மாவட்டத்தில் 29-10-2026 அன்று நடைபெறும் எனவும், நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories