பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.11.2026




கவிஞர் சுரதா

திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:55.செங்கோன்மை

குறள் எண்:545

குறள்:

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்:

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பழமொழி :

United we stand ; divided we fall.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பேப்பர், உணவு அடைக்கப்பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை தெருவிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ வீசாமல் குப்பை தொட்டியில் மட்டுமே போடுவேன். 

 2. நெகிழி பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

பொன்மொழி : 

வாழ்க்கையில் உயர்வு என்பது நாம் அடையும் பதவியில் இல்லை; நாம் பிறருக்கு வழங்கும் மதிப்பிலும், நம் செயல்களில் வெளிப்படும் நேர்மையிலும் உள்ளது.

Thought for the Day :

True greatness is not measured by the position we attain, but by the respect we give others and the honesty reflected in our actions.

பொது அறிவு : 

1. உலக குழந்தைகள் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? 

நவம்பர் 20. 

2. உலக மீன்வள நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? 

நவம்பர் 21. 

English words :

1. Hostile - விரோதமான - Antagonistic

2. Gullible - எளிதில் ஏமாறும் - Naive

புவியியலும் சுற்றுசூழலும் :

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.

நவம்பர் 23

கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்


சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்

சர். ஜெகதீஷ் சந்திரபோஸ்


சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

### 🌻 முழு கவனத்துடன் செயல்படுவோம்!

ஒரு அழகான கிராமத்தில் சமீர் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் திறமையானவன். ஆனால், எந்த வேலையைச் செய்தாலும் முழு கவனத்துடன் செய்ய மாட்டான். ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதே மற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பான்.

ஒருநாள் அவனுடைய ஆசிரியர், பள்ளியில் நடைபெறவிருந்த அறிவியல் கண்காட்சிக்காக ஒரு அழகான    மாதிரியை காண்பித்து அதை காகிதம் கொண்டு செய்யும்படி மாணவர்களிடம் கூறினார்.

சமீரும் அந்த வேலையைச் செய்யத் தொடங்கினான். ஆனால், அவன் வேலை செய்யும்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டும், விளையாட்டைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டும், அறிவியல் கண்காட்சியில் தான் பங்கு பெற போவது குறித்தும் பேசிக் கொண்டு இருந்தான். இதனால் அவன் அளவுகளைச் சரியாகக் கணக்கிடவில்லை. காகிதத்தையும் தவறாக வெட்டிவிட்டான்.

அவனுடைய மாதிரி அழகாக அமையவில்லை. அதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டான்.

அப்போது அவனுடைய ஆசிரியர் அவனிடம் வந்து, "சமீர், உன்னிடம் நல்ல திறமை இருக்கிறது. ஆனால், நீ செய்யும் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்தால் எந்த வேலையும் சிறப்பாக அமையாது" என்று அறிவுரை கூறினார்.

ஆசிரியரின் அறிவுரையை சமீர் புரிந்துகொண்டான்.

மறுநாள் அதே மாதிரியை மீண்டும் செய்யத் தொடங்கினான். இம்முறை பேசாமல், அவசரப்படாமல், ஒவ்வொரு செயலையும் கவனமாகச் செய்தான். அளவுகளைச் சரியாகக் கணக்கிட்டு, காகிதங்களை அழகாக வெட்டி, நேர்த்தியாக ஒட்டினான்.

இறுதியில் அவன் செய்த மாதிரி மிகவும் அழகாக இருந்தது. அறிவியல் கண்காட்சியில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றான்.

அன்று சமீர் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொண்டான்.

எந்த வேலையைச் செய்தாலும் முழு கவனத்துடனும் பொறுப்புடனும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்தான்.

 🌷 கதையின் நீதி:

"செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்தினால், சிறிய முயற்சியும் பெரிய வெற்றியைத் தரும்."

இன்றைய செய்திகள்

23.11.2026

🗒️சென்னையில் 'சில்க் மார்க்' கண்காட்சி; நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்.

🗒️நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இந்தியா வருகை, மேலும்  நமது பிரதமர் பிரதமர் மோடி இருவரும்  இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

🗒️ இந்தியாவில் குறைந்த வட்டி விகிதம் இருப்பதால்தான் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிகிறது என்று டிரம்ப் பாராட்டியுள்ளார்

🏀விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக ஷமீனா ரியாஸ் .

Today's Headlines

1. A 'Silk Mark' exhibition will begin in Chennai tomorrow. Union Minister Giriraj Singh will inaugurate it.

2. Nepal Prime Minister Balendra Shah is visiting India. He and our Prime Minister Narendra Modi will hold important talks today.

3. Trump has praised India, saying that the low interest rates have helped the country achieve 7% economic growth.

🏀 Sports News

1. National Squash Championship: Tamil Nadu's Shameena Riyaz has entered the finals.
Covai women ICT_போதிமரம்
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories