
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
ஓய்வூதியம்
» பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன: ஐகோர்ட் கேள்வி
பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன: ஐகோர்ட் கேள்வி
தமிழகத்தில், 2003ம் ஆண்டு ஏப்.,1ம் தேதிக்கு முன், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்தும். அதற்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், காவல்துறை பணிக்கு விண்ணப்பித்திருந்தும், அதன்பின் பணியில் சேர்ந்த, 8,431 இரண்டாம் நிலை காவலர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் தங்களை, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 8,431 காவலர்களையும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை டிச.2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.










No comments:
Post a Comment