G.O 172 - வெற்றி வீடு திட்டம்; வீடு கட்ட ரூ.5 லட்சம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - அரசாணை - Eligibility & Documents


வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மரம், மூங்கில், மண், இலை, புல், கூரை போன்ற நிலையற்ற பொருட்களால் கட்டப்பட்ட கூரை வீடுகள், சிமெண்ட் ஷீட் சுவர் கொண்ட வீடுகள், தகரம், பனை ஓலை, தார்பாய், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேய்ந்த வீடுகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஒரு வீட்டுக்கு அதிகபட்ச மானியமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் வீட்டின் பரப்பளவு சமையலறை உட்பட குறைந்தபட்சம் 360 சதுர அடியாகவும், அதிகபட்சம் 500 சதுர அடியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டை சற்று பெரிதாகக் கட்ட விரும்புவோருக்கு கடன் உதவியும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 6 விழுக்காடு வட்டியுடன் 50 ஆயிரம் ரூபாயோ, கூட்டுறவு அல்லது வணிக வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாயோ வீட்டுக் கடன் வழங்கப்படும்.

வங்கிக் கடனுக்கு ஆண்டுக்கு 3 விழுக்காடு வட்டி மானியத்தை அரசே ஏற்கும். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று, மாதத் தவணையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.

G.O 172 - வெற்றி வீடு திட்டம் - அரசாணை- Pdf 👇👇👇

Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories