Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 3, 2019

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள்கட்டாயம் செய்ய வேண்டியவை!


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.



பிளஸ் ஒன்னில் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து விட்டு, கல்லூரியில் பி.காம்., படிக்க முயற்சிப்பது நல்லதல்ல. அதேபோல, இன்ஜினியரிங், மருத்துவம், சி.ஏ., படிக்க எந்த பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து செயல்பட வேண்டும். மதிப்பெண் குறைவாக இருந்தாலோ அல்லது பிளஸ் 1 படிக்க விருப்பமில்லை என்றாலோ, டிப்ளமா படிப்பில் சேரலாம்.



அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்பவர்கள், கல்வி உதவி தொகை, சலுகை கட்டணத்தையும் பெற முடியும்.டிப்ளமா படிப்பை முடித்த பின், தொழிற்சாலை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியபடியே, பகுதி நேர, பி.இ., - பி.டெக்., படிப்பிலும் சேரலாம். பத்தாம் வகுப்பில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், தங்களால் எதை படிக்க முடியும், எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை, முடிவு செய்து, அதற்கேற்ப பாட பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். மருத்துவ படிப்புக்கு விருப்பம் இருந்தால், 'நீட்' தேர்வை எழுத, பிளஸ் 1ல் இருந்தே தயாராக வேண்டியது முக்கியம். அதே போன்று ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங்படிக்க வேண்டும் என்றால், அதற்கு, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு எல்லாம் இப்போதது முதலே தயாராக வேண்டும். எனவே அதற்கு உரிய பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். தொழிற்கல்வி பாட பிரிவு எடுத்தால், பிளஸ் 2வுக்கு பின், பொறியியலில் சில பாடப்பிரிவுகள் மட்டுமே படிக்க முடியும்.