சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎஸ்இ


டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என சிபிஎஸ்இ கல்வி தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.இந்த தேர்வை சுமார் 27 லட்சம் பேர் எழுதி உள்ளார்கள். இந்நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த மே2ம் தேதி வெளியான நிலையில், 10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.இந்த தேர்வுகள் முடிவுகள் www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in இணையதளங்களில் வெளியாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை தொடர்பு தேர்வு முடிவுகள் இன்று எப்போது வெளியாகும் என்று தொடர்பு கொண்டு விசாரித்தனர். இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ தேர்வு வாரிய அதிகாரி ரமா சர்மா தெரிவித்துள்ளார்.