Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 19, 2019

இனி ஓட்டுநர் உரிமம் பெற கல்வி தகுதி தேவையில்லை விரைவில் சட்டத் திருத்தம்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனிடையே, இந்த சட்டப்பிரிவால் திறமையான பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்ற கருத்து நீண்டகாலமாக இருந்து வந்தது.



மேலும், இந்த சட்டப்பிரிவைநீக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்கும் விதமாக, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவை யான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது, முந்தைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர் பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் நேற்று தெரி வித்துள்ளது. அதேசமயத்தில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான திறன் காண் தேர்வினை (ஸ்கில் டெஸ்ட்) இன்னும் கடுமையாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள் ளது. - பிடிஐ