Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 19, 2019

உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா?

தண்ணீர் இல்லாத வாழ்க்கை என்பதை எவராலும் நினைத்து பார்க்க முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி அடிப்படை வாழ்க்கைக்கு கூட தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும். உடல் எடையை குறைக்க தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். உங்கள் உணவு முறைகளில் செய்யும் மாற்றங்கள், உடற்பயிற்சி, 6 முதல் 8 மணி நேரம் வரையிலான தூக்கம் போன்றவை சின்ன சின்ன மாற்றங்கள் கூட உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றும்.



ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையான மற்றும் எளிதான வழி தண்ணீர் குடிப்பதாகும். தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மேலும் பசியையும் கட்டுப்படுத்தும்

இந்த பதிவில் உங்கள் எடைக்கு ஏற்ப எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா?
தினமும் தேவையான நீர்
நீங்கள் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டிய நீரின் அளவு உங்களின் பாலினம், செயல்பாடுகள், ஆரோக்கிய நிலைகள் மற்றும் உங்களின் எடை போன்ற படிநிலைகளை பொறுத்து அமைகிறது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானது என்று கூறப்படுகிறது. ஆனால் சில ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்



உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது

பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சாப்பிடுவதற்கு 20 அல்லது 30 நிமிடத்திற்கு முன் 2 கப் தண்ணீர் குடிப்பது உங்களை நிறைவாக உணர வைக்கும். இது எடை குறைப்பில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது

அதிக தண்ணீர் குடிப்பதின் பக்க விளைவுகள்

மனித உடல் 66 சதவீதம் நீரால் ஆனது, நமது உடலில் இருக்கும் அதிக எடையை குறைக்க இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதிகளவு தண்ணீர் குடிப்பது நமது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனால் வாந்தி, தலைவலி, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்

நீர் குடிக்க வழிகாட்டி

தினமும் காலை 2 அல்லது 4 கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் பணிபுரிபவராக இருந்தால் தினமும் 2.5 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்காதீர்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் 16 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி முடிந்த பிறகு 16 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.



நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என்பதை முடிவு செய்யும் முதல் காரணி உங்களின் எடை ஆகும். ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது முழுக்க முழுக்க அவர்களின் உடல் எடையை சார்ந்தது. பொதுவாக ஒருவர் எவ்வளவு எடை அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்

எடையை கணக்கிடுவது எப்படி?

முதலில் உங்கள் எடையை கிலோவில் இருந்து பவுண்ட்க்கு மாற்றி கொள்ளுங்கள். 1 கிலோ என்பது 2.20 பவுண்ட் ஆகும். அதற்கு பிறகு உங்கள் எடையை 2/3 ஆல் பெருக்குங்கள். இது நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை காட்டும். உதாரணத்திற்கு உங்கள் எடை 200 பவுண்டாக இருந்தால் அதனை 2/4 ஆல் பெருக்கும்போது அது கிட்டதட்ட 113 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வரும். 1 அவுன்ஸ் என்பது 29 மிலி ஆகும்.



உடற்பயிற்சிகள்

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் அதிகளவு நீரை வியர்வை மூலம் இழப்பீர்கள்.

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 350 மிலி நீரை குடிக்கவும். நீங்கள் தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் 17 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.