Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 13, 2019

தேர்வு கட்டணம் உயர்வு விளக்குகிறது சி.பி.எஸ்.இ.,

புதுடில்லி:தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக, நேற்று விளக்கம் அளித்து உள்ள, சி.பி.எஸ்.இ., 'பிற கல்வி முறையில் வசூலிக்கும் அளவுக்குத் தான், தேர்வுக் கட்டணம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களின் தேர்வு கட்டணத்தை மாற்றிஅமைத்துள்ளது. அதன்படி, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், ௨௪ மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில் நேற்று, 'மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் - சில உண்மைகள்' என்ற தலைப்பில், சி.பி.எஸ்.இ., சில விளக்கங்களை அளித்துள்ளது.அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:l கட்டணங்கள் மாற்றம், டில்லிக்கு மட்டும் என, சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவறு. நாடு முழுமைக்கும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கட்டண மாற்றம் பொருந்தும்l கட்டணம், பிற கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்துக்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளதுl கடந்த ஐந்தாண்டுகளாக, கட்டணங்கள் உயர்த்தப்படாத நிலையில், இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளதுl சி.பி.எஸ்.இ., சுயநிதி கல்வி நிறுவனம். லாபம் சம்பாதிப்பது, அதன் நோக்கமல்ல; அதே நேரத்தில் நஷ்டத்தையும் ஏற்க முடியாது.இவ்வாறு, தெரிவித்து உள்ளது.