பிடிஎஸ் படிப்புகள்: நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு நடத்துகிறது.


நிகழாண்டில், அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள 211 பிடிஎஸ் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அவற்றுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. www.tnhealth.org, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களின் வாயிலாக கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.