Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 16, 2019

தொடக்கப்பள்ளி மாணவர்களை முட்டிப்போட வைக்க கூடாது: தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை!

தொடக்கப்பள்ளி மாணவர்களை முட்டிப்போட வைக்க கூடாது: தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை!

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்துத்தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மண்டியிட்டு முட்டிப்போட வைத்தல்,நீண்ட நேரம் நிற்க வைத்தல், கைவிரல் கணுக்களின் மீது அடித்தல், பள்ளி மைதானத்தில் ஓட விடுதல், கன்னத்தில் அறைதல்,பாலியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்துதல், வகுப்பறையில் தனியாக வைத்துப் பூட்டுதல் போன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் கண்டிப்பாக நடக்கக் கூடாது.அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.