சமையல் செய்ய தெரிந்தவர்களுக்கு அரசு வேலை!


தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக இருக்கும் சமையலர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமையலர் (ஆண்) - 13 காலிப் பணியிங்களும், சமையலர் (பெண்) - 19 காலிப் பணியிடங்களும் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகளை நன்கு சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.இப்பணியிடத்திற்கு சம்பளமாக ரூ. 15,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதரப் படிகளும் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடம் குறித்த அறிவிப்பிற்கான இணைப்பு: https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/09/2019090933.pdfவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.09.2019 ஆகும்.