திருக்குறள் - குறள் எண் 01


தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 01 - VIDEO CLICK DOWNLOAD

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்:  01

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டு இயங்குவது போல இந்த உலகமும் கடவுளை முதலாகக் கொண்டு இயங்குகிறது என்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவரும் தாம் பாடிய முதல் குறட்பாவான “அகர முதல எழுத்தெல்லாம்” என்னும் இக்குறட்பாவை அகரத்திலேயே தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இக்குறட்பா எடுத்துக்காட்டு உவமை அணியில் அமைந்துள்ளது. அதாவது போல என்னும் உவம உருபு இக்குறட்பாவில் மறைந்து வந்துள்ளது.

ஆதி பகவன் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொற்கள் கடவுளை முதலாக உடையது எனப் பொதுப்பட அமைந்திருப்பினும் ஆய்வாளர்கள் ஆதி என்பது திருவள்ளுவரின் தாயார் பெயர்  என்றும் பகவன் என்பது திருவள்ளுவரின் தந்தையின் பெயர் என்றும் கூறுகின்றனர்.

ஆதி-கல்வி; பகவன் – கடவுள்; ஆதிபகவன் – கல்விக்குக் கடவுள்; கல்விக்குக் கடவுள் – ஆசிரியன். என்று கூறுவாறும் உளர்.

ஆதிபகவன் – விநாயகனும் சிவனும்

ஆதிபகவன் – பகலவன்

ஆதிபகவன் – புலைச்சியும் பார்ப்பனனும்

ஆதிபகவன் – தாயும் தந்தையும்

ஆதிபகவன் – அறிஞன்

ஆதிபகவன் – புத்தன்

ஆதிபகவன் – கடவுள், இறைவன்