திருக்குறள் - குறள் எண் 02


தினம் ஒரு திருக்குறள் - குறள் எண் 02 - VIDEO CLICK DOWNLOAD

பால்: அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள்: 02

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய்மையான அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் (ஆசிரியனின்) திருவடிகளை தொழாமல் இருப்பவர்கள், அவர் கற்ற கல்வியினால் அடையும் பயன் ஒன்றுமில்லை.

அதாவது, ஒருவன் தான் கற்கக்கூடிய அனைத்து நூல்களையும் கற்று அறிவுடையவன் ஆகிவிட்டான் என்றாலும்,  அக்கல்வியின் பயன் அவனுக்குக் கற்றுத்தந்த நல்ல ஆசிரியனை வணங்குதலாகும். அவ்வாறு அவன்  வணங்கவில்லை என்றால், அவன் கற்றக் கல்வியினால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே இதன்பொருள்.